X
கேம் ஓவர்
Drama | Thriller | 14 Jun 2019 | U/A | 103 Mins
Tamil

கேம் ஓவர் கதை

கேம் ஓவர் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்சீ, சஞ்சனா நடராஜன் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படமானது பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்து திரைக்கதையில் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சஷிகாந்த் தயாரிக்க, இசையமைப்பாளர் ரோன் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வசந்த் மற்றும் படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின் இணைந்து பணியாற்றியுள்ள நிலையில், இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிவிருக்கிறது.

கதைக்களம்

ஒரு வீடியோ கேம் நிறுவனத்தில் வீடியோ கேம் டெவலப்பராக பணியாற்றிவரும் டாப்சீ நகரத்தில் ஒதுக்குபுறமாக உள்ள ஒரு வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார். இவரை தவிர்த்து அந்த வீட்டிற்கு பணிப்பெண் ஒருவர் வீட்டு வேலைகளை செய்ய வருவது வழக்கம். தனது வீட்டில் இருந்தபடியே வீடியோ கேம்களை உருவாக்கி வரும் டாப்சீ புத்தாண்டு தினத்தன்று இவருக்கு ஒரு கசப்பான சம்பவம் ஒன்று நடக்கின்றது.

அந்த விபத்திலிருந்து உயிர் தப்பிய இவர், தாற்காலியமாக சக்கர நாற்காலியில் அமரும் நிலைமை ஏற்படுகிறது. பின்னர் இருட்டு என்றாலே பயப்படுகிறார். ஒரே இருக்கையில் அமர்ந்துள்ள டாப்சீ பொழுதுபோக்கிற்காக வீடியோ கேம்ஸ்  விளையாட  தொடங்குகிறார். 

அப்படி வீடியோ கேம்ஸ் விளையாடும் இவருக்கு தீடிரென சில திகில் சம்பவங்கள் நடக்கின்றன. அதே நேரம் தனது கையில் உள்ள ஒரு டாட்டூவாலும் டாப்சிக்கு சில பிரச்சனைகள் வருகிறது. அத்துடன் டாப்சீக்கு சில மர்ம நபர்கள் துரத்துவது மாதிரியான கற்பனைகள் தோன்றுகிறது. 

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இவருக்கு நடந்தது என்ன? அந்த டாட்டூவின் பின்னணியில் உள்ள தொடர்பு என்ன? இவருக்கு வரும் ஆபத்துகள் எதனுடன் தொடர்புடையது? சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ள இவர் எப்படி அதனை எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+