X
கேம் ஓவர்

கேம் ஓவர்

Drama | Thriller | 14 Jun 2019 | U/A | 103 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

கேம் ஓவர் கதை

கேம் ஓவர் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்சீ, சஞ்சனா நடராஜன் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படமானது பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்து திரைக்கதையில் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சஷிகாந்த் தயாரிக்க, இசையமைப்பாளர் ரோன் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வசந்த் மற்றும் படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின் இணைந்து பணியாற்றியுள்ள நிலையில், இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிவிருக்கிறது. கதைக்களம் ஒரு வீடியோ கேம் நிறுவனத்தில் வீடியோ கேம் டெவலப்பராக பணியாற்றிவரும் டாப்சீ நகரத்தில் ஒதுக்குபுறமாக உள்ள ஒரு வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார். இவரை தவிர்த்து அந்த வீட்டிற்கு பணி ப் பெண் ஒருவர் வீட்டு வேலைகளை செய்ய வருவது வழக்கம். தனது வீட்டில் இருந்தபடியே வீடியோ கேம்களை உருவாக்கி வரும் டாப்சீ புத்தாண்டு தினத்தன்று இவருக்கு ஒரு கசப்பான சம்பவம் ஒன்று நடக்கின்றது. அந்த விபத்திலிருந்து உயிர் தப்பிய இவர், தாற்காலியமாக சக்கர நாற்காலியில் அமரும் நிலைமை ஏற்படுகிறது. பின்னர் இருட்டு என்றாலே பயப்படுகிறார். ஒரே இருக்கையில் அமர்ந்துள்ள டாப்சீ பொழுதுபோக்கிற்காக வீடியோ கேம்ஸ்  விளையாட  தொடங்குகிறார்.  அப்படி வீடியோ கேம்ஸ் விளையாடும் இவருக்கு தீடிரென சில திகில் சம்பவங்கள் நடக்கின்றன. அதே நேரம் தனது கையில் உள்ள ஒரு டாட்டூவாலும் டாப்சிக்கு சில பிரச்சனைகள் வருகிறது. அத்துடன் டாப்சீக்கு சில மர்ம நபர்கள் துரத்துவது மாதிரியான கற்பனைகள் தோன்றுகிறது.  புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இவருக்கு நடந்தது என்ன? அந்த டாட்டூவின் பின்னணியில் உள்ள தொடர்பு என்ன? இவருக்கு வரும் ஆபத்துகள் எதனுடன் தொடர்புடையது? சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ள இவர் எப்படி அதனை எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் கதை.
Read More

கேம் ஓவர் நடிகர்கள் & படக்குழுவினர்

கேம் ஓவர் அணியின் தகவல்

இயக்குனர் அஷ்வின் சரவணன்
கதை அஷ்வின் சரவணன்
சங்கதி காவ்யா ராம்குமார்
ஒளிப்பதிவாளர் வசந்த் எ
தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்
இசை ரோன் எத்தன் யோஹன்
தயாரிப்பாளர் சஷிகாந்த் எஸ்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கேம் ஓவர் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
'என்னை நம்பி எவ்வளவு பாரத்தை வேண்டுமானாலும் வைக்கலாம்' என இயக்குனர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறார் டாப்சி. முதல் காட்சியில் இருந்தே ஸ்வப்னாவின் வாழ்க்கைக்குள் நம்மை அழைத்து சென்றுவிடுகிறார். திரையில் நாம் பார்ப்பது டாப்சியை அல்ல, ஸ்வப்னாவைத் தான் எனும் நம்பகதன்மையை கொடுக்கும் அளவுக்கு சிறப்பானதொரு நடிப்பை கொடுத்து, படத்தை முழுமையாக தாங்கியிருக்கிறார். தொடர்ந்து நிறைய தமிழ் படங்களில் நடிங்க டாப்சி. டாப்சி வீட்டு வேலைக்காரப் பெண்ணாக வரும் வினோதினி, அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக நியாயம் செய்திருக்கிறார். அச்சு அசலாக அந்த பாத்திரமாகவே மாறியிருக்கிறார். இவர்கள் இருவரைத் தவிர, சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா மற்றும் மலையாள நடிகை மாலா பார்வதிக்கு தான் இந்த படத்தில் அதிக காட்சிகள் இருக்கின்றன. நிறைவாக செய்திருக்கிறார்கள். பல கேள்விகள் இருந்தாலும், ஒரு நல்ல த்ரில்லர் பார்த்த உணர்வையே தருகிறது படம். கேம் ஓவரில் இருந்து மீண்டும் ஒரு புதிய கேமை தொடங்கியிருக்கிறார் டாப்சி.

கேம் ஓவர் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

கேம் ஓவர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+