twitter

    காட் ஃபாதர் கதை

    காட் ஃபாதர் இயக்குனர் ஜெகன் ராஜசேகர் இயக்கத்தில் நடராஜன் சுப்பிரமணியம், லால் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் நவீன் ரவீந்திரன் இசையமைத்துள்ளார்.

    காட் ஃபாதர் படத்தின் கதை

    தனது மகனை காப்பாற்ற இரண்டு தந்தையின் போராட்டமே காட் ஃபாதர் படத்தின் கதைக்கரு

    லால் (மருதுசிங்கம்) ஒரு பிரபல தாதா. இவரை எதிப்பவரை கருணை இன்றி கொலை செய்யும் ஒரு கொடூரன். இவருக்கு திருமணம் நடந்து 13 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு வாரிசு உருவாகிறது. தனது மொத்த அன்பையும் தனது மகனிடம் அர்ப்பணித்து மகனை பாசமாக வளர்த்து வருகிறார்.

    நட்டி (அதியமான்) ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தார். தனது மனைவி அனன்யா மற்றும் குழந்தை அஸ்வந்த் உடன் சந்தோசமாக வாழ்ந்து வருபவர். தனது குடும்பமே உலகம் என அமைதியா வாழ்ந்து வருகிறார்.

    லால் குழந்தைக்கு தீடிரென உடல் நல குறைவு ஏற்படுகிறது. இவருக்கு இதயம் பலவீதமாக உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த சிறுவனை காப்பாற்ற இவர் வயதில் இவரின் பிளட் குரூப் உள்ள ஒரு சிறுவன் வேண்டும். அப்படி கிடைத்தால் தான் அவனின் இதயத்தை இந்த சிறுவனுக்கு மாற்றி லால் மகனை காப்பாற்ற முடியும் மருத்துவர்களால் என தெரியவருகிறது.

    தனது குழந்தையை காப்பாற்ற என செய்வது என அறியாமல் இருக்கும் லால், நட்டி மகன் தான் தனது மகனை காப்பாற்றுவான் என அறிகிறார். இதற்காக நட்டியின் மகனை கொன்று அவனின் இதயத்தை தனது மகனுக்கு பொறுத்த போராடுகிறார்.

    ஒரு ரௌடியிடன் இருந்து தனது மகனையும் குடும்பத்தையும் ஒரு அப்பாவி நபராக இருந்து நட்டி எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் திரில்லர் மற்றும் சுவாரஸ்ய திரைக்கதை.

    **Note:Hey! Would you like to share the story of the movie காட் ஃபாதர் with us? Please send it to us ([email protected]).