ஹே சினாமிகா இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் துல்கர் சல்மான், அதிதி ராவ், காஜல் அகர்வால் முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை க்ளோபல் ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் 2020 மார்ச் 12ல் இணையத்தில் இப்படத்தின் தலைப்பு மற்றும் பூஜை புகைப்படங்களுடன் வெளியாகின.