ஹாய் நான்னா - இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி, மிருணாள் தாகூர், ஸ்ருதி ஹாசன் என பலர் நடித்திருக்கும் காதல் & குடும்பத்திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் மோகன் செருகுரி தயாரிக்க, இசையமைப்பாளர் ஹெஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம், மற்றும் ஹிந்தி மொழியில் உருவாகி ஒரு பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது.
ஹாய் நான்னா படத்திற்கு ஒளிப்பதிவாளர் சானு வர்கேஸ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரவீன் அந்தோணி எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2023 டிசம்பர் 7ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.
ஹாய் நான்னா படத்தின் கதை
கதைக்கரு: தாயை இழந்த தனது குழந்தையை வளர்த்து வரும் நானி, தன் மகளின் பாதுகாப்பு மற்றும் ஆசைகளுக்காக வேறு ஒரு திருமணம் செய்தாரா இல்லையா என்பதே இப்படத்தின் கதைக்கரு.
கதை - பெரிய போட்டோகிராஃபராக வர வேண்டும் என விராஜ் (நானி) முயற்சித்து வருகிறார். அவருக்கும் வர்ஷாவுக்கும் (மிருணாள் தாகூர்) காதல் ஏற்பட்டு அந்த காதல் திருமணத்தில் முடிகிறது. அந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறக்கிறது. அப்படியே சில காலங்கள் முன் நகர்ந்து செல்கிறது. பிரபல புகைப்படக் கலைஞராக நானி உள்ளார். நுரையீரல் பாதிப்பால் அவதிப்படும் தனது மகள் மகீயை சிங்கிள் பேரன்ட்டாக வளர்த்து வருகிறார். அப்போது, யாஷ்னா (மிருணாள் தாகூர்) அந்த குழந்தையை பார்த்துக் கொள்ள வருகிறார். வர்ஷாவுக்கு என்ன ஆனது? யாஷ்னா யார்? என்பதே ஹாய் நான்னா படத்தின் கதை.