ஹிட்லர் - இயக்குனர் தனா இயக்கத்தில் விஜய் ஆன்டனி, ரியா சுமன் & கவுதம் மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சஞ்சய் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் விவேக் - மெர்வின் இசைக்குழு இப்படத்திற்கு இசையமைத்துள்ளது.
ஹிட்லர் திரைப்படத்தின் கதை
அமைச்சர் ராஜவேலுக்கு தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால் அடுத்த முறை முதலைமைச்சர் ஆகும் வாய்ப்பு உள்ளது. எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அவர் கோடிக்கணக்கில் பணத்தை மக்களுக்கு பட்டுவாடா செய்ய முயல்கிறார். அதே சமயம், வேலை தேடி சென்னை வரும் செல்வா (விஜய் ஆன்டணி) எலக்ட்ரிக் ரயில் பயணிக்கும்போது அமைச்சரின் கோடிக்கணக்கான பணம் கொள்ளைப்போகிறது. மேலும் 3 பேர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.
பணம் கொள்ளையடிக்கப்பட்டதற்கும் செல்வாவிற்கும் சம்பந்தம் இருக்கிறதா? அந்த கொலைகளை செய்தது யார்? என்ற கேள்விகளுக்கு விடைதான் படத்தின் மீதிக்கதை.