இஞ்சி இடுப்பழகி தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இருமொழித் திரைப்படம். இத்திரைப்படத்தை பிரகாஷ் கோவேலமுடி மற்றும் அவரது மனைவி கனிகா இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படத்தில் ஆர்யா மற்றும் அனுஷ்கா ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பரத், ஊர்வசி, ஸ்ருதி ஹாசன் போன்றோரும் நடிக்க, இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் எம் எம் கீரவாணி.
கதை :
இத்திரைப்படம் ஒரு குண்டான பெண்ணினை மையமாக கொண்டு அவள் சமூகத்தில் எம்மாதிரயான பிரச்சனைகளை சந்திக்கின்றாள் என்பதே இப்படத்தின் முக்கிய கரு. ஸ்வீட்டி (அனுஷ்கா)-யின் பெற்றோர் தன் குண்டான மகளுக்கு பல இடத்தில் மாப்பிளை தேடுகின்றனர். ஆனால், பெண் குண்டாக இருப்பதால் திருமணத்திற்கு யாரும் முன்வரவில்லை. இந்நிலையில்தான் ஒரு விசேஷ வீட்டில் ஸ்வீட்டி அபி(ஆர்யா)-வை சந்திக்கின்றார். அதன் பின்பு ஆர்யாவை இவர் கைபிடித்தாரா..? இவரது குண்டான தோற்றத்தை இவர் எதற்காக குறைக்க முயல்கிறார்..? இவரது முயற்சியில் வெற்றிபெற்றார..? என்பதே மீதிக்கதை.