X
தமிழ் » திரைப்படங்கள் » இஞ்சி இடுப்பழகி
இஞ்சி இடுப்பழகி

இஞ்சி இடுப்பழகி

Comedy | Romance | 27 Nov 2015 |
Tamil

2.6 /5 Users

2.5 /5 Filmibeat

இஞ்சி இடுப்பழகி கதை

இஞ்சி இடுப்பழகி தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இருமொழித் திரைப்படம். இத்திரைப்படத்தை பிரகாஷ் கோவேலமுடி மற்றும் அவரது மனைவி கனிகா இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படத்தில் ஆர்யா மற்றும் அனுஷ்கா ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பரத், ஊர்வசி, ஸ்ருதி ஹாசன் போன்றோரும் நடிக்க, இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் எம் எம் கீரவாணி. கதை :  இத்திரைப்படம் ஒரு குண்டான பெண்ணினை மையமாக கொண்டு அவள் சமூகத்தில் எம்மாதிரயான பிரச்சனைகளை சந்திக்கின்றாள் என்பதே இப்படத்தின் முக்கிய கரு. ஸ்வீட்டி (அனுஷ்கா)-யின் பெற்றோர் தன் குண்டான மகளுக்கு பல இடத்தில் மாப்பிளை தேடுகின்றனர். ஆனால், பெண் குண்டாக இருப்பதால் திருமணத்திற்கு யாரும் முன்வரவில்லை. இந்நிலையில்தான் ஒரு விசேஷ வீட்டில் ஸ்வீட்டி அபி(ஆர்யா)-வை சந்திக்கின்றார். அதன் பின்பு ஆர்யாவை இவர் கைபிடித்தாரா..? இவரது குண்டான தோற்றத்தை இவர் எதற்காக குறைக்க முயல்கிறார்..? இவரது முயற்சியில் வெற்றிபெற்றார..? என்பதே மீதிக்கதை.
Read More

இஞ்சி இடுப்பழகி நடிகர்கள் & படக்குழுவினர்

இஞ்சி இடுப்பழகி அணியின் தகவல்

இயக்குனர் பிரகாஷ் கோவேலமுடி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை எம் எம் கீரவாணி
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

இஞ்சி இடுப்பழகி விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
உடல் எடை ஒரு பிரச்சினையே இல்லை... எடைக்குறைப்பு என்ற பெயரில் ஆபத்தான வழிகளுக்குப் போகாதீர்கள் என்ற ஒன்லைனுக்குள், ஆர்யா - அனுஷ்கா காதலைச் சொல்லியிருக்கிறார்கள். படத்தின் பெரும் பலம் அனுஷ்கா. இப்படியொரு கதைக்காக இந்த அளவு எடைப் போட்டு கஷ்டப்பட்டிருக்கிறார். குண்டாக இருந்தாலும் ஸ்வீட்டி, செம பியூட்டி! ஆர்யாவுக்கு அதிகம் வேலையில்லை. தன் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார். அனுஷ்கா மீது காதல் பிறப்பதை இயல்பாகக் காட்டியிருக்கிறார். கீரவாணியின் இசையில் குண்டு அனுஷ்கா குத்தாட்டம் போடும் ஒரு பாடல் ஓகே. நீரவ் ஷா இருந்தும் ஒளிப்பதிவு பிரமாதம் என்று சொல்ல வைக்கவில்லை. சில காட்சிகளில் உதட்டசைவும் வசனங்களும் பொருந்தாமல் நெளிய வைக்கிறது. பிரமாதமான நடிகர்கள், பெரும் தயாரிப்பு நிறுவனம் எல்லாம் கிடைத்தும் சரியாகப் பயன்படுத்தத் தவறி இருக்கிறார் புதிய இயக்குநர் பிரகாஷ் ராவ். அனுஷ்காவுக்காக வேண்டுமானால் ஒரு முறை பார்க்கலாம்!

இஞ்சி இடுப்பழகி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

இஞ்சி இடுப்பழகி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+