X
முகப்பு » பிரபலங்கள் » சுருதி ஹாசன்
சுருதி ஹாசன்

சுருதி ஹாசன்

Actress/Singer/Music Director
பயோடேட்டா:  சுருதிஹாசன் பாடகர் , இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். இவர் பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின்மகளாவார். சுருதிஹாசன் 1986, சனவரி 28 இல் சென்னை நகரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சுருதி ராஜலெட்சுமி. சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், மும்பைகல்லூரியில் உளவியலும் முடித்தார். பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசை கற்றார். சுருதிஹாசன் தன் 6-ம் வயதில் தனது முதல் பாடலை பாடினார். தேவர் மகன் என்ற தனது தந்தையின் படத்தில் இவர் இந்த பாடலை பாடினார். இதன் பிறகு சாச்சி 420 என்ற இந்தி படத்திலும், ஹேராம் (தமிழ் மற்றும் இந்தி), என்மன வானில், வாரணம் ஆயிரம், லக் மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார். இவர் 2000-ம் ஆண்டில் வெளியான ஹேராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு சோகன் சா இயக்கத்தில் உருவான லக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். பெரும் எதிர்ப்பார்புக்கிடையே வெளிவந்த இந்த திரைப்படம், வணிக ரீதியில் தோல்வியை சந்தித்தது. 2011இல் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைபடத்தில் நடித்தார். 2009-ம் ஆண்டு வெளிவந்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு சுருதிஹாசன் இசை அமைத்தார். இதுவே இவர் இசை அமைத்த முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்திற்கு இவரும் ஒரு துணை தயாரிப்பாளராக பணியாற்றினார். தமிழில் ஏழாம் அறிவு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக நடிக்கின்றார்.
மேலும் படிக்க

சுருதி ஹாசன் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
as Actress
லோகேஷ் கனகராஜ் 14 Aug 2025
ராஜீவ் குமார் Dec 2025
as Actress
பிரசாந்த் நீல் 22 Dec 2023
சவுரவ் 07 Dec 2023

சுருதி ஹாசன்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

சுருதி ஹாசன்

பெயர் சுருதி ஹாசன்
பிறந்த தேதி 28 Jan 1986
வயது 40
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

சுருதி ஹாசன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

சுருதி ஹாசன் புகைப்படங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+