2வது மனைவிக்கு லிப் லாக்.. மாதம்பட்டி ரங்கராஜ் உடன் ஜாய் கிரிஸில்டா கும்மாளம்.. வெளியானது வீடியோ!
சென்னை: மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணமாகிவிட்டது என்றும் தான் 6 மாதங்கள் கர்ப்பமாக இருக்கிறேன் என பிரபல காஸ்ட்யூம் டிசைனர் ஜாய் கிரிஸில்டா தெரிவித்தது பெரிய பூகம்பத்தையே கிளப்பியது.
முதல் மனைவி ஸ்ருதியை விவாகரத்து செய்யாமல் மாதம்பட்டி ரங்கராஜ் எப்படி 2வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருக்கு குழந்தையும் கொடுக்க முடியும் என சோஷியல் மீடியாவில் பலரும் பொங்கி எழுந்தனர்.

திடீரென முதல் மனைவி ஸ்ருதியுடன் மாதம்பட்டி ரங்கராஜ் திருமண நிகழ்ச்சிக்கு வந்ததும் ரசிகர்களை ஒரே குழப்பத்தில் ஆழ்த்தி மண்டையை காய வைத்தது. இந்நிலையில், என்னோட கணவர் எடிட் செய்தது என ஒரு போட்டோக்கள் அடங்கிய எடிட் வீடியோவை தனது சோஷியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்துள்ளார் ஜாய் கிரிஸில்டா.
சினிமா டூ சின்னத்திரை: மாதம்பட்டி ரங்கராஜ் மெஹந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். மேலும், பல பிரபலங்கள் வீட்டு திருமணங்கள் மற்றும் பெரிய பெரிய விசேஷங்களுக்கு சமையல் செய்தும் கலக்கி வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியையும் கடந்த ஆண்டில் இருந்து தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கை பெரும் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
2வது மனைவியுடன் ஜாலி: மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவி ஸ்ருதியுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில், 2வது மனைவி ஜாய் கிரிஸில்டாவுடனும் கும்மாளம் போட்டு ஜாலியாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தனது கணவர் எடிட் செய்தது என ஏகப்பட்ட ரொமாண்டிக் போட்டோக்களை கோர்வையாக எடிட் செய்து பேக்கிரவுண்ட் காதல் பாட்டெல்லாம் போட்டு உருவாக்கிய வீடியோவை சற்றுமுன் ஜாய் சந்தோஷமாக வெளியிட்டுள்ளார்.
லிப் லாக் போட்டோவும் இருக்கு: ஜாய் கிரிஸில்டாவுடன் கட்டிப்பிடித்து, கன்னத்தை உரசி ஏகப்பட்ட போட்டோக்களை எடுத்துக் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் தனது 2வது மனைவிக்கு உதட்டில் முத்தம் கொடுத்த லிப் லாக் போட்டோவையும் அந்த வீடியோவில் எடிட் செய்திருக்கிறார். அதை அப்படியே சமூகத்திற்கும் காட்டிவிட வேண்டும் என்கிற எண்ணத்துடன் ஜாய் கிரிஸில்டா ஷேர் செய்துள்ளார். இந்த பஞ்சாயத்து எங்கேப் போய் முடியப்போகுது என்றே தெரியவில்லை என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











