X
சலார்

சலார்

Action | Drama | Thriller | 22 Dec 2023 | A | 177 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

சலார் கதை

சலார் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை கே.ஜி.எஃப் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். அதிரடி படமாக உருவாகியுள்ள சலார் படத்திற்கு ஒளிப்பதிவாளர் புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கரனி எடிட்டிங் செய்துள்ளார். சலார் படம் ஒரு பேன் இந்திய திரைப்படமாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியில் உருவாகிறது. சலார் படம் இரண்டு பாகங்கள் உடைய படமாக உருவாகி, முதற்கட்டமாக இப்படத்தின் முதல் பாகம் 2023 டிசம்பர் 22ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.  சலார் திரைப்படத்தின் படக்குழு தகவல்கள் சலார் திரைப்படத்தின் டீசர், டிரைலர் & பாடல் வீடியோக்கள் சலார் திரைப்படத்தின் கதை கதைக்கரு : இரு உயிர் நண்பர்களான பிருத்விராஜ் & பிரபாஸ் விரோதியாக இரு துருவங்களாக மாறுகின்றனர். எதற்காக, எப்படி? பின் என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதைக்கரு. கதை 1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் கொடூரமான கொள்ளையர்கள் கூட்டமாக சேர்ந்து மூன்று குழுக்களாக ஒரு இடத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களாலேயே அவர்கள் இடத்தை பிடிக்க முடியவில்லை என்றும் மேலும் இந்திய வரைபடத்தில் இருந்தே அந்த நகரத்தை அழித்து  விட்டு, ரகசியமாக உள்ளது என்றும் கூறுகின்றனர்.  ஜகபதி பாபு அரசனாக உள்ள நிலையில், அவர் இருக்கும் போதே அவரது மகன் ராஜ மன்னார் (பிருத்விராஜ்) அரியணை ஏற வேண்டும் என சொல்லி விட்டு, அதற்கு முன்னாடி நான் வெளியே கொஞ்ச காலம் போயிட்டு வந்து முடிசூட்டி விடுகிறேன் என சொல்கிறார். பாபி சிம்ஹா மற்றவர்களை சகுனி வேலை செய்து தூண்டிவிட அப்பா போன உடனே பிருத்விராஜை போட்டுத் தள்ளி விட்டால் அவர் எப்படி துரை ஆவார் என்கிற சதி நடக்கிறது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஆர்மியை அழைத்து வருகின்றனர். ஆனால், தன்னுடைய ஆர்மியாக சிறு வயதில் பிரிந்து சென்ற தேவாவை (பிரபாஸ்) அழைத்து வருகிறார் பிருத்விராஜ்.  இதை பார்த்து பிருத்விராஜின் தம்பியே சிரிக்கிறார். ஆனால், தேவா எவ்ளொ பெரிய பைத்தியக்கார நண்பன் என்றும் நட்புக்காக எத்தனை படைகள் வந்தாலும் பீமன் போல தனி ஒருவனாக நின்று துவம்சம் செய்து விடுவான் என்பதை நன்கு அறிந்து கொண்டு அவனை வைத்து தான் விரும்பிய அரியணையை பிடிக்க நினைக்கிறார். பிருத்விராஜ் நினைத்தது நடந்ததா? பிரபாஸுக்கும் பிருத்விராஜுக்கும் இடையே பிரச்சனை எப்படி வெடிக்கிறது? என்பதெல்லாம் மீதிக் கதை அல்ல, அடுத்த பார்ட் பார்த்தால் தான் தெரியும் என தலையை சுற்ற வைத்து விடுகின்றனர்.
Read More

சலார் நடிகர்கள் & படக்குழுவினர்

சலார் அணியின் தகவல்

இயக்குனர் பிரசாந்த் நீல்
ஒளிப்பதிவாளர் புவன் கௌடா
தொகுப்பாளர் உஜ்வல் குல்கரனி
இசை ரவி பஸ்ரூர்
தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சலார் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
இரு உயிர் நண்பர்களான பிருத்விராஜ் & பிரபாஸ் விரோதியாக இரு துருவங்களாக மாறுகின்றனர். எதற்காக, எப்படி? பின் என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதைக்கரு.

சலார் ட்ரெய்லர்

Video Thumbnail

சலார் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

சலார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+