இரவுக்கு ஆயிரம் கண்கள் அறிமுக இயக்குனர் மு மாறன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஜி தில்லி பாபு தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
சென்னையின் ஒரு பங்களா வீட்டில் மர்மமான முறையில் ஒருவர் இறந்துகிடக்கும் காட்சியில் இருந்து ஆரம்பிக்கிறது படம். வேறு ஒரு சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்துக்கு வரும் கால் டாக்சி டிரைவர் பரத் (அருள்நிதி), போலீசிடம் கொலையாளி என கைக்காட்டப்படுகிறார்.
போலீசில் இருந்து தப்பிக்கும் அருள்நிதி, நிஜ கொலையாளியை தேடி ஓடுகிறார். கொலை செய்யப்பட்டது யார்? கொலை செய்தது யார்? அவரை அருள்நிதி கண்டுபிடித்தாரா? என்பது மீதிக்கதை.