இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் கதை

  இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் மற்றும் பலர் நடித்த காதல் திரைப்படம். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

  கதை:

  கெளதம் (ஹரிஷ் கல்யாண்) தனது சிறு வயதில் தன்னுடைய அம்மா வேறொருவருடன் ஓடிப்போனதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்து ஒரு கோபத்துடன் வாழ்கிறார். எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாக சமாளிக்க தெரியாதவராக வளர்க்கிறார். பொறுமை என்பது சற்றும் இல்லாமல் எதற்கெடுத்தாலும் அடிதடியை கையாளுகிறார்.

  மறுபுறம் தாரா (ஷில்பா மஞ்சுநாத்) பெரிய இடத்து பெண். இவர்கள் இருவருக்கும் நடுவில் வழக்கமான தமிழ் சினிமா காதல் கதை போல் முதலில் மோதலில் ஆரம்பித்து இறுதியில் காதலில் முடிகிறது.

  தீவிர காதலில் மூழ்கியிருந்தாலும் கெளதம் மற்றும் தாரா இடையே சில சில குழப்பங்கள் வருகிறது. தன்னுடைய அம்மாவை போல் தாராவும் வேறு ஒருவருடன் சென்றுவிடுவாரோ என்ற குழப்பம் கௌதமிற்கும், கௌதமை நம்பி தன் வாழ்க்கையை துவங்கலாமா என்ற குழப்பம் தாராவிற்கும் இருக்கிறது.

  இதனால், வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் ஆகும் தருவாயிலும் ஒரு தெளிவான முடிவினை எடுக்க தயங்குகிறார் கெளதம். 

  கெளதம் மற்றும் தாரா இவ்விருவரின் இடையே நடக்கும் காதல், மோதல், சண்டை, பிரிவு, கோபம், குடும்பத்தின் எதிர்ப்பு தான் இந்த திரைப்படம். கௌதம் தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்தினாரா? அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்ததா ? இறுதியில் இவ்விருவர் ஒன்று சேர்ந்தனரா? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

  **Note:Hey! Would you like to share the story of the movie இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).