X
தமிழ் » திரைப்படங்கள் » இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Drama | Romance | 15 Mar 2019 | U/A | 153 Mins
Tamil

2.5 /5 Users

4 /5 Filmibeat

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் கதை

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்  இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் மற்றும் பலர் நடித்த காதல் திரைப்படம். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். கதை: கெளதம் (ஹரிஷ் கல்யாண்) தனது சிறு வயதில் தன்னுடைய அம்மா வேறொருவருடன் ஓடிப்போனதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்து ஒரு கோபத்துடன் வாழ்கிறார். எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாக சமாளிக்க தெரியாதவராக வளர்க்கிறார். பொறுமை என்பது சற்றும் இல்லாமல் எதற்கெடுத்தாலும் அடிதடியை கையாளுகிறார். மறுபுறம் தாரா (ஷில்பா மஞ்சுநாத்) பெரிய இடத்து பெண். இவர்கள் இருவருக்கும் நடுவில் வழக்கமான தமிழ் சினிமா காதல் கதை போல் முதலில் மோதலில் ஆரம்பித்து இறுதியில் காதலில் முடிகிறது. தீவிர காதலில் மூழ்கியிருந்தாலும் கெளதம் மற்றும் தாரா இடையே சில சில குழப்பங்கள் வருகிறது. தன்னுடைய அம்மாவை போல் தாராவும் வேறு ஒருவருடன் சென்றுவிடுவாரோ என்ற குழப்பம் கௌதமிற்கும், கௌதமை நம்பி தன் வாழ்க்கையை துவங்கலாமா என்ற குழப்பம் தாராவிற்கும் இருக்கிறது. இதனால், வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் ஆகும் தருவாயிலும் ஒரு தெளிவான முடிவினை எடுக்க தயங்குகிறார் கெளதம்.  கெளதம் மற்றும் தாரா இவ்விருவரின் இடையே நடக்கும் காதல், மோதல், சண்டை, பிரிவு, கோபம், குடும்பத்தின் எதிர்ப்பு தான் இந்த திரைப்படம். கௌதம் தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்தினாரா? அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்ததா ? இறுதியில் இவ்விருவர் ஒன்று சேர்ந்தனரா? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.
Read More

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் நடிகர்கள் & படக்குழுவினர்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் அணியின் தகவல்

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கோடி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சாம் சி எஸ்
தயாரிப்பாளர் பாலாஜி காப
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
தமிழ் சினிமா அளவுக்கு வேறு எந்த மொழியிலும் இத்தனை ஆயிரம் காதல் படங்கள் வந்திருக்குமா என்பது தெரியவில்லை. அந்த அளவுக்கு காதலை கொண்டாடி வருபவர்கள் நம் இயக்குனர்கள். ரஞ்சித் ஜெயக்கொடியின் இந்த இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் திரைப்படமும், அப்படி ஒரு காதல் கொண்டாட்டம் தான். ஆனால், இன்னும் எத்தனை படங்கள் வந்தாலும், காதல் என்றுமே சலிக்காது என்பதை ஆணித்தரமாக கூறுகிறது இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும். 'முதலில் மோதல் பிறகு காதல்', 'பணக்கார பெண்ணுக்கும் ஏழை பையனுக்கும் காதல்', என ஏற்கனவே நாம் பலமுறை பார்த்து சலித்துபோன அதே ஒன்லைன் தான் இந்த படமும். ஆனால் ரஞ்சித் ஜெயக்கொடியின் திரைக்கதையும், தனித்துவமான கதாபாத்திரங்களும், ராஜன்ராதமனாலனுடன் இணைந்து அவர் எழுதிய வசனங்களும், சாமின் இசையும், கவினின் ஒளிப்பதிவும் என எல்லாம் சேர்ந்து படத்தை புதிதாக காட்டியிருக்கிறது. இன்றைய தலைமுறை இளைஞர்கள், தங்களை எளிதாக இப்படத்துக்குள் புகுத்திக் கொள்வார்கள் என்பது நிச்சயம். இருப்பினும், இன்றைய இளைஞர்களை மையப்படுத்தி வரும் காதல் படங்களில் இருந்து தனித்து நிற்கிறான் இந்த இஸ்பேடு ராஜா. இவனை போல நம் ஊர் ரோமியோக்களும் யோசித்தால், நம் பெண்கள் அனைவருமே இதய ராணிகள் தான்.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+