காடன் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ராணா டகுபதி, ஜெகபதி பாபு நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ளார்.
காடன் திரைப்படத்தின் கதை
வீரபாரதி என்ற காடன் (ராணா) கோவை அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதியில் லட்சக்கணக்கான மரங்கள் மற்றும் காட்டு விலங்குகளுக்கு பாதுகாவலராக உள்ளார். தமிழக சுற்றுசூழல் அமைச்சர் குறிஞ்சிநாதன் (ஆனந்த் மகாதேவன்) அந்த காட்டினை அழித்து ஒரு ரியல் எஸ்டேட் மற்றும் நவீன சுகுசு விடுதி கட்ட திட்டமிடுகிறார். அதற்கு ராணா தடையாக நிற்க, ஒரு பொய் வழக்கை சுமத்தி ராணாவை சிறையில் அடைகின்றனர்.
ராணா சிறையில் இருந்து வரும் போது அந்த காட்டினை அழித்து அங்கு அவர் விருப்பத்திற்கு ஏற்ப கோல்ஃப், ஆம்பிதியேட்டர் என்று சகல வசதிகள் கொண்ட குடியிருப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பின் காடன் இந்த டவுன்ஷிப்பிற்கு எதிராக போராடுவதே படத்தின் மீதிக்கதை.
இந்த கதையில் காட்டு யானைகளை விரட்டும் ஒரு கும்கி யானையின் பாகனாக விஷ்ணு விஷால் நடித்துள்ளார்.