கடாரம் கொண்டான்: தூங்காவனம் புகழ் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் சீயான் விக்ரம், அக்ஷரா ஹாசன் நடித்துள்ள அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு தயாரிப்பாளராக உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் டீஸர் ஜனவரி 15ஆம் தேதி வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை புத்தாண்டு வாழ்த்துக்களுடன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இத்திரைப்படத்தின் டிரெய்லர் 2019 ஜூலை 3-ல் இணையத்தளத்தில் வெளியாகிறது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தில் சியான் விக்ரமுடன் அக்ஷரா ஹாசன், பூஜா குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் திரைக்கதை முழுவதும் வெளிநாடுகளில் நடக்கும் திரைக்கதை அம்சத்தை கொண்டுள்ளது.
கதை
மலேசியாவில் வாழும் தமிழ் தம்பதிகளான அபி ஹசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். மருத்துவராக பணியாற்றும் அபி ஹசன் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவி அக்ஷரா ஹாசன்-யை கவனித்து கொண்டு வருகிறார்.
தீடிரென ஒரு விபத்தில் சிக்குகிறார் விக்ரம். இவர் அபி ஹசன் பணியாற்றும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார். விக்ரம்-யை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அபி ஹாசன்-யை மிரட்டும் ஒரு கும்பல் அக்ஷரா ஹாசனை கடத்திச் செல்கிறது.
இதனால் குழப்பம் அடைகிறார் அபி ஹாசன், விக்ரம் யார்? இவர்கள் பிரச்சனையில் மாட்டிக்கொண்டிருக்கும் அக்ஷரா ஹாசன் என ஆனார்? என்பதே படத்தின் கதை.