கமலி ஃப்ரம் நடுக்காவேரி இயக்குனர் ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் நடிகை ஆனந்தி முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஜெய் சம்பத் தயாரிக்க, இசையமைப்பாளர் தீணா தயாளன் இசையமைத்துள்ளார்.
ஒரு சாதாரண நடுத்தர குடும்பப்பெண்ணின் போராட்டமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜெகதீசன் மற்றும் படத்தொகுப்பாளர் கோவிந்தராஜ் இணைந்து பணியாற்றியுள்ளனர். இப்படம் பல ரசிகர்களின் எதிர்பார்ப்புகளில் 2021 பிப்ரவரி 19ல் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
கமலி ஃப்ரம் நடுக்காவேரி திரைப்படத்தின் கதை
கதைக்கரு : பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர கூடிய தருணம், படிப்பு, கனவு, காதல் என அனைவரும் எதிர்கொள்ளும் குழப்பமான சூழ்நிலைக்கு தள்ளப்படும் கமலி. காதல் ஒரு புறமும், கனவு ஒரு புறமும் இருக்க இவை இரண்டையும் கமலி அடைந்தாளா என்பதே 'கமலி ஃப்ரம் நடுக்காவேரி' படத்தின் கதை.