twitter

    கனவு வாரியம் கதை

    கனவு வாரியம் இயக்குனர் அருண் சிதம்பரம் தானே இயக்கி நடித்துள்ள திரைப்படம். இத்திரைப்படத்தில்  இவருடன் இளவரசு, பிளாக் பாண்டி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஷயாம் பெஞ்சமின் இசையமைத்துள்ளார்.

    கதை :

    எண்பதுகளில் கிராமங்கள் மின் விளக்கை முதல் தரிசனம் செய்த காலகட்டத்தில் ஆரம்பிக்கிறது படம். இளவரசுவின் ஒரே மகன் அருண் சிதம்பரம். கிராமத்தில் 8-ம் வகுப்பு வரை படிக்கும் அருணுக்கு ஏதாவது புதிதாக கண்டு பிடிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்று ஆசை. இந்த மனப்பாட பள்ளிக் கல்வி பிடிக்காமல் போகிறது. 'சரி.. உனக்குப் பிடிச்சதை பண்ணுடா மகனே' அனுமதிக்கிறார் இளவரசு. ரேடியோ கடையில் சேர்கிறான். வளர்ந்து வாலிபனாகிறான். சொந்தமாக ஒரு ரேடியோ, செல்போன் சர்வீஸ் கடை வைக்கிறான். அந்த ஊரே 18 மணி நேர மின்வெட்டால் முடங்கிப் போகிறது. அருணின் கடையும் பாதிக்கிறது. புதிதாக ஏதாவது செய்து, மின்சாரம் தயாரிக்க முயற்சி செய்கிறான். அதற்கு ஞானசம்பந்தன் உதவுகிறார். ஆனால் ஊரோ, கிறுக்கன் என கிண்டலடிக்கிறது.

    அப்போதுதான் ஜியாவைச் சந்திக்கிறான். ஜியாவின் அண்ணன் யோக் ஜேப்பி ஒரு ஐடி பணியாளர். ஆனால் அந்த வேலையில் இருக்கும் மன அழுத்தத்தை தாங்க முடியாமல், வேலையை உதறிவிட்டு சொந்த ஊரில் இயற்கை விவசாயம் பார்க்க வருகிறார். லட்சக் கணக்கில் வந்த சம்பளத்தை விட்டுவிட்டானே என யோக் ஜேப்பியையும் கிறுக்கனாகவே பார்க்கிறது ஊர்.

    இந்த இருவரும் தங்கள் முயற்சிகளில் எப்படி வென்றார்கள் என்பதுதான் மீதி.
    **Note:Hey! Would you like to share the story of the movie கனவு வாரியம் with us? Please send it to us ([email protected]).