twitter
    Tamil»Movies»Kanavu Variyam
    கனவு வாரியம்

    கனவு வாரியம்

    U | 2 hrs 35 mins | Drama
    Release Date : 24 Feb 2017
    3.5/5
    Critics Rating
    Audience Review
    கனவு வாரியம் இயக்குனர் அருண் சிதம்பரம் தானே இயக்கி நடித்துள்ள திரைப்படம். இத்திரைப்படத்தில்  இவருடன் இளவரசு, பிளாக் பாண்டி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஷயாம் பெஞ்சமின் இசையமைத்துள்ளார்.

    கதை :

    எண்பதுகளில் கிராமங்கள் மின் விளக்கை முதல் தரிசனம் செய்த காலகட்டத்தில் ஆரம்பிக்கிறது படம். இளவரசுவின் ஒரே மகன் அருண் சிதம்பரம். கிராமத்தில் 8-ம் வகுப்பு வரை படிக்கும் அருணுக்கு ஏதாவது புதிதாக கண்டு பிடிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்று ஆசை. இந்த மனப்பாட பள்ளிக் கல்வி பிடிக்காமல் போகிறது. 'சரி.. உனக்குப் பிடிச்சதை பண்ணுடா...
    • அருண் சிதம்பரம்
      அருண் சிதம்பரம்
      Director
    • ஷயாம் பெஞ்சமின்
      ஷயாம் பெஞ்சமின்
      Music Director
    • tamil.filmibeat.com
      3.5/5
      ஒவ்வொரு சாதனையாளனின் ஆரம்ப முயற்சியும் தொடக்கத்தில் பல அவமானங்களைச் சந்திக்கிறது. கிறுக்கனாகப் பார்க்க வைக்கிறது. முயற்சி வென்ற பிறகோ, அந்த சாதனையாளனை ஊரே கொண்டாடுகிறது என்பதை மையப்படுத்தி வந்துள்ள படம் கனவு வாரியம்.

      அருண் சிதம்பரத்துக்கு முதலில் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

      இந்த அளவுக்கு நேர்த்தியாக இவர் படமெடுப்பாரா என ஆரம்பத்தில் யாரும் நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால் நம்பிக்கையோடு, நன்கு திட்டமிட்டு உழைத்திருக்கிறார். அது ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது.

      கிராமங்களில் அன்றைக்கு இருந்த, இன்றைக்கு மறந்தே போய்விட்ட கல்லா மண்ணா, கிச்சுக் கிச்சு தாம்பூலம் போன்ற ஏராளமான விளையாட்டுகளை மையப்படுத்தி உருவான பாடலுடன் படம் தொடங்குகிறது. அங்கே இங்கே என அலைபாயாமல், ஒரே நேர்க்கோட்டில் நேர்த்தியாகப் பயணிக்கிறது.

      என்னடா இது... திரும்பத் திரும்ப ..