»   »  அமெரிக்காவின் 'ரெமி' விருதை வென்றது 'கனவு வாரியம்'!

அமெரிக்காவின் 'ரெமி' விருதை வென்றது 'கனவு வாரியம்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர் அருண் சிதம்பரத்தின் 'கனவு வாரியம்' திரைப்படம் உலகப் புகழ் பெற்ற 'ரெமி' விருதை வென்றுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஏப்ரல் 8 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறும் 49 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் ('வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன்') இந்த விருது வழங்கப்பட உள்ளது.

'வேர்ல்ட் ஃபெஸ்ட்' உலகின் முதன்மையான திரைப்பட விழாக்களில் ஒன்றாகும். உலகின் புகழ்பெற்ற இயக்குனர்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (ஜுராஸிக் பார்க், ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்), ரிட்லி ஸ்காட் (கிளேடியேட்டர், த மார்ஷியன்), ஜார்ஜ் லுகாஸ் (ஸ்டார் வார்ஸ்), ஆங் லீ (ஹல்க், லைப் ஆப் பை), பிரான்சிஸ் போர்ட் கப்போலா (தி காட்பாதர்), ஜான் லீ ஹான்கோக் (த பிளைண்ட் சைட், சேவிங் மிஸ்டர் பேங்க்ஸ்) போன்ற பல தலைசிறந்த இயக்குனர்கள் இந்தத் திரைப்பட விழாவின் கண்டுபிடிப்பே.

Kanavu Variyam wins REMI award in Worldfest

நாற்பத்தி மூன்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்கள் ‘வேர்ல்ட் ஃபெஸ்ட்' திரைப்பட விழாவில் ரெமி விருதை வெல்ல போட்டி போடும். அவைகளில் தரமானவையே தேர்வு செய்யப்படும்.

'கனவு வாரியம்' திரைப்படம் உலகில் முதல் முறையாக வேர்ல்ட் ஃபெஸ்ட் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. அருண் சிதம்பரத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கத்தில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் கதாநாயகனாக அருண் சிதம்பரம் அறிமுகமாகிறார்.

Kanavu Variyam wins REMI award in Worldfest

இது மட்டுமின்றி, 'கனவு வாரியம்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கல்லா மண்ணா' என்ற பாடலும் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது.

இதுகுறித்து அருண் சிதம்பரம கூறுகையில், "அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் ஏப்ரல் 19 முதல் 24 வரை நடைபெறும் 'பேர் போன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில்' திரையிட 'கல்லா மண்ணா' பாடல் தேர்வாகியுள்ளது. 'கல்லா மண்ணா' பாடல் நகர மயமாக்கலிலும் வீடியோ கேம் மோகத்திலும் நாம் மறந்து போன 51 கிராமிய விளையாட்டுக்களை, பாடல் வரிகளின் மூலமாகவும், காட்சியமைப்பின் மூலமாகவும் படம்பிடித்துள்ளோம்," என்றார்.

Kanavu Variyam wins REMI award in Worldfest

அருண் சிதம்பரம் அமெரிக்காவில் ஐடி துறையில் பணியாற்றியவர். சினிமா மீதுள்ள காதலால் இப்போது அமெரிக்காவிலிருந்து கோலிவுட்டுக்கு திரும்பியுள்ளார் என்பது கூடுதல் செய்தி!

English summary
Arun Chidambaram's ‘Kanavu Variyam' wins the Prestigious Remi Award from the 49th WorldFest Houston International Film Festival scheduled from April 8-17, 2016.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil