»   »  'கனவு வாரியம்'... வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ்த் திரைப்படம்!

'கனவு வாரியம்'... வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ்த் திரைப்படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹாலிவுட்டின் டாப் சினிமா நிறுவனங்களுள் ஒன்றான வார்னர் பிரதர்ஸ் முதல் முறையாக ஒரு தமிழ்ப் படத்தை வெளியிடுகிறது. அதுதான் கனவு வாரியும்.

தமிழகத்தில் நிலவிய மின்வெட்டு பிரச்சனையை மையமாக கொண்டு டிசிகாப் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், வெளியாவதற்கு முன்பே 7 சர்வதேச விருதுகளையும், 9 நாடுகளில் இருந்து 15 சர்வதேச அங்கீகாரங்களையும், வென்றுள்ளது. உலகப் புகழ்ப் பெற்ற 2 சர்வதேச 'ரெமி' விருதுகளை வென்ற முதல் இந்தியப் படம் 'கனவு வாரியம்'. 'ரெமி' விருதை இதற்கு முன் வென்றவர்கள் 'ஜூராஸிக் பார்க்' படத்தை இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், 'லைப் ஆப் பை' படத்தை இயக்கிய ஆங் லீ, 'கிளேடியேட்டர்' படத்தை இயக்கிய ரிட்லி ஸ்காட் உள்ளிட்டோர்.

Kanavu Variyam, Warner Bros first Tamil movie

இந்தியா முழுவதும்வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படம் 'கனவு வாரியம்' என்பது குறிப்பிடத்தக்கது.

"93 வருட பாரம்பரியம் உள்ள உலகின் புகழ்ப்பெற்ற ஹாலிவுட் ஸ்டூடியோவான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் 'கனவு வாரியம்' திரைப்படத்தை வெளியிடுவதை எண்ணி ஆசிர்வதிக்கப்பட்டதாய் உணர்கிறோம். 'கனவு வாரியம்' விருதுக்காக எடுக்கப்பட்ட படமல்ல. ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம். காதல், காமெடி, சென்ட்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் கொண்ட பொழுது போக்கு படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுடன் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம். வார்னர் பிரதர்ஸ் படத்தை வெளியிடுவதால் 'கனவு வாரியம்' வர்த்தக ரீதியில் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்று நம்பிக்கையை கொடுத்திருக்கிறது," என்கிறார் இயக்குநர் அருண் சிதம்பரம்.

Kanavu Variyam, Warner Bros first Tamil movie

வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குனர் டென்சில் டயஸ் கூறுகையில், "கனவு வாரியம் திரைப்படம் எளிய மக்களின் வாழ்வியலை சுவாரசியமாக பேசும் சமூகத்திற்கான படம் மட்டும் அல்ல... இது நம்பிக்கையை விதைக்கும் படமும் கூட," என்றார்.

'கனவு வாரியம்' திரைப்படத்தில் ஜியா (அறிமுக கதாநாயகி), இளவரசு, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், பிளாக் பாண்டி, யோக் ஜெப்பி, செந்தி குமாரி உட்பட பலர்நடித்துள்ளனர். இசை - ஷியாம் பெஞ்சமின், ஒளிப்பதிவு - எஸ்.செல்வகுமார்.

Kanavu Variyam, Warner Bros first Tamil movie

இயக்குநர் அருண் சிதம்பரம் அமெரிக்காவில் பிஇ, எம்எஸ் படிப்பை முடித்துவிட்டு சர்வதேச வங்கியான 'ஜே பி மார்கன் சேஸில்' (சிகாகோ) பணிபுரிந்தார். சினிமாவின் மீதுள்ள காதலால் இலட்சங்களில் சம்பாதிக்கும் வேலையைவிட்டு விட்டு சென்னை வந்து 'கனவு வாரியம்' திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எழுதி, இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

அருண் சிதம்பரம், பிரபல உடற்பயிற்சி நிபுணர் 'ஆணழகன்' சிதம்பரத்தின் இளைய மகன்.

English summary
Hollywood fame Warner Bros is releasing its first Tamil movie Kanavu Variyam in India.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil