கருமேகங்கள் கலைகின்றன இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கத்தில் மம்தா மோகன்தாஸ், பாரதிராஜா, ராதாரவி, யோகி பாபு என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்திற்கு பாடலாசிரியர் வைரமுத்து பாடல் வரிகள் எழுத, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தின் கதை
சமீபத்தில் தனது 75வது பிறந்தநாளை கொண்டாடிய பாரதிராஜா, ஓய்வு பெற்ற நீதிபதியாக தன் மகன் கவுதம் மேனன் மற்றும் மகளோடு வாழ்ந்து வருகிறார். மகனுக்கு தனக்கும் இடையே சில சங்கடங்கள் உருவாகிறது. பின் பாரதிராஜாவுக்கு 12 வருட பழைய கடிதம் ஒன்று கிடைக்க, அதனை பின்தொடர்ந்து பாரதிராஜா யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறி தனது தேடலை தொடங்குகிறார்.
பாரதிராஜா பயணிக்கும் பாதையில் இவர் யோகிபாபு-வை சந்திக்கிறார். யோகிபாபு ஒரு எளிமையான நபர். இவர் ஒரு பெண்ணுக்கு ஆதரவு அளித்து தனது இல்லத்தில் தங்க வைத்துள்ளார். பிறகு அந்த பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. யோகி பாபு-வை தந்தை என அழைத்து வரும் அந்த குழந்தை ஒரு கட்டத்தில் அனாதை ஆசிரமத்தில் வாழும் நிலைக்கு தள்ளப்படுகிறது. பாரதிராஜா அந்த குழந்தையை மீட்டு யோகிபாபு உடன் சேர்த்து வைக்கிறார். பின் என்ன ஆனது? பாரதிராஜாவின் பயணம் பற்றிய ரகசியம் என்ன எனபது தான் படத்தின் மீதிக்கதை.