காட்டுப்பய சார் இந்த காளி இயக்குனர் யுரேகா இயக்கத்தில், ஜெய்வந், அபிஷேக், மூணாறு ரமேஷ் மற்றும் பலர் நடித்த அதிரடி திரைப்படம்.
கதை:
சென்னை மாநகரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சைக்கோ ஒருவன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை எரித்த சம்பவம் ஞாபகம் இருக்கிறதா... அதை மையமாக வைத்து தான் காட்டுப்பய சார் இந்த காளி படத்தை உருவாக்கியிருக்கார் இயக்குனர் யுரேகா. அநியாய வட்டிக்கு மக்களுக்கு கடன் கொடுத்து வதைக்கும் ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் வாகனங்களும், அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களின் வாகனங்களையும் சைக்கோ ஒருவன் எரித்து வருகிறான். அவனை கண்டுபிடிக்கும் பொறுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்வந்திடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் சைக்கோவை பிடித்தாரா இல்லையா என்பதே கதை.