கேடி பில்லா கில்லாடி ரங்கா 2013ல் வெளிவந்த நகைச்சுவை திரைப்படம். இதை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இதில் விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா, டெல்லி கணேசன் போன்றோர் நடித்துள்ளனர்.
கதை:
விமலும் சிவகார்த்திகேயனும் எந்த வேலைக்கும் போகாமல் இருக்கும் இளைஞர்கள். இவர்களின் குறிக்கோள் அரசியலில் நுழைந்து பதவி பெற்று அதன் மூலம் சம்பாரிப்பது என்பது. இருவரும் தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்த ஆரம்பிக்கும்போது, ஈடு செய்ய முடியாத இழப்பைச் சந்திக்கிறார்கள்.