twitter

    குப்பத்து ராஜா கதை

    குப்பத்து ராஜா இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார், பார்த்திபன், பூனம் பஜ்வா நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சரவணன் தயாரிக்க இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    கதை
    வடசென்னையில் உள்ள ஒரு குப்பத்தில் வாழ்ந்து வருகிறார், இப்படத்தின் நாயகன் ராக்கெட் (ஜீ.வி.பிரகாஷ்). சேட்டு கடையில் வாகனம் சீஸ் செய்யும் வேலை செய்கிறார். குப்பத்தில் வாழ்ந்தாலும் குடிகார அப்பா எம்எஸ் பாஸ்கர், நண்பர்கள், காதலி என மகிழ்ச்சியாக இருக்கிறார்.

    அதே குப்பத்தில் எம்.ஜி.ஆர்-ரின் தீவிர ரசிகனாக குப்பத்து தலைவராக இருக்கிறார் எம்.ஜி ராஜேந்திரன் (பார்த்திபன்). குப்பத்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தலைவர் போல் செயல்பட்டு வருகிறார் ஜி.வி.பிரகாஷின் அப்பாவான எம்.எஸ்.பாஸ்கரும், பார்த்திபனும் நண்பர்கள். தொடக்கத்தில் இருந்தே ஜி.வி.பிரகாஷுக்கும், பார்த்திபனுக்கும் மோதல் இருக்கிறது.

    அதே குப்பத்தில் வசித்து வரும் நாயகி கமலா (பல்லக் லால்வானி), ராக்கெட்டுக்கும் கமலாவுக்கும் காதல் ஏற்படுகிறது. அதே சமயம் கவர்ச்சியாக ஜி.வி.பிரகாஷ் வீட்டுக்கு அருகில் குடிவருகிறார் பூனம் பாஜ்வா. இவரால் காதலர்களான ஜி.வி.பிரகாஷ் - பல்லக் லால்வானி இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.

    ஜிவி பிரகாஷின் செயலுக்கு பார்த்திபன் அடக்கி வாசிக்க சொல்லுவதும், அச்சுறுத்துவதுமாக உள்ளார். ஒரு கட்டத்தில் தன் சுதந்திரத்தை இழப்பது போலவும், ஜிவி பிரகாஷ் மற்றும் அவரின் நண்பர்களுக்கு பார்த்திபன் தரப்பு ரவுடி கும்பல் அச்சுறுத்தலாக இருப்பதுமாக மாறுகிறது.

    ஆரம்பம் முதலே அந்த பகுதியில் பெரிய கையான பார்த்திபனுடன் ஜீவிக்கு அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. மேலும் ஊர் கவுன்சிலர், வேறு சில ரௌடிகளுடனும் அவருக்கு பகை வளர்கிறது.

    அந்த பகுதியில் கவுன்சிலராக இருக்கும் கிரணை பொது இடத்தில் வைத்து எம்.எஸ்.பாஸ்கர் கிண்டல் செய்கிறார். மறுநாளே எம்.எஸ்.பாஸ்கர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். எம்.எஸ்.பாஸ்கரை கொலை செய்தது யார் என்று தெரியாமல் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் குழம்பி இருக்கின்றனர். அதற்காக பார்த்திபன் உட்பட பலர் மீதும் சந்தேகப்படுகிறார் ஜீ.வி பிரகாஷ்.

    அதேபோல் அந்த பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவனும் மர்மமான முறையில் காணாமல் போகிறான். இதற்கு காரணம் யார்?, அங்கு உள்ள பிரச்சனைகள் என்ன?, எப்படி ஜிவி பிரகாஷ் குப்பத்து ராஜாவாக மாறுகிறார்?, தன் தந்தையை கொன்றது யார் என கண்டுபிடித்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை. 
    **Note:Hey! Would you like to share the story of the movie குப்பத்து ராஜா (2018) with us? Please send it to us ([email protected]).