twitter
    Tamil»Movies»Kuppathu Raja (2018)
    குப்பத்து ராஜா (2018)

    குப்பத்து ராஜா

    U/A | 2 hrs 7 mins | Comedy
    Release Date : 05 Apr 2019
    2.5/5
    Critics Rating
    3/5
    Audience Review
    குப்பத்து ராஜா இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார், பார்த்திபன், பூனம் பஜ்வா நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சரவணன் தயாரிக்க இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    கதை
    வடசென்னையில் உள்ள ஒரு குப்பத்தில் வாழ்ந்து வருகிறார், இப்படத்தின் நாயகன் ராக்கெட் (ஜீ.வி.பிரகாஷ்). சேட்டு கடையில் வாகனம் சீஸ் செய்யும் வேலை செய்கிறார். குப்பத்தில் வாழ்ந்தாலும் குடிகார அப்பா எம்எஸ் பாஸ்கர், நண்பர்கள், காதலி என மகிழ்ச்சியாக இருக்கிறார்.

    அதே குப்பத்தில் எம்.ஜி.ஆர்-ரின் தீவிர ரசிகனாக...
    • பாபா பாஸ்கர்
      பாபா பாஸ்கர்
      Director
    • சரவணன்
      சரவணன்
      Producer
    • ஜி வி பிரகாஷ் குமார்
      ஜி வி பிரகாஷ் குமார்
      Music Director
    • பில்மிபீட்
      2.5/5
      குப்பத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, அங்குள்ள காதல், நட்பு,பாசம், குடும்பங்கள், ரவுடியிசம் என அனைத்தையும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். ஆனால் வடசென்னை பாஷை என படத்தில் பேசப்படும் மொழி அவ்வளவாக ஒட்டவில்லை. நிறைய இடங்களில் யதார்த்தம் மீறப்பட்டுள்ளது.

      சாஃப்ட் பாயாக நடித்து வந்த ஜி.வி.பிரகாஷை, ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியிருக்கிறது குப்பத்து ராஜா. லோக்கல் பையனாக, கலக்கியிருக்கிறார். குறிப்பாக ரொமான்ஸ் காட்சிகளிலும் சரி, தந்தையுடனான பாசக்காட்சிகளிலும் சரி நன்றாகவே நடித்திருக்கிறார்.

      ஹீரோயின் பாலக் லால்வானி நல்ல அறிமுகம். லோக்கல் பெண்ணாகவே தெரிகிறார். ஆனால் வாய் அசைவு தான் நான்சிங்கில் இருக்கிறது. அவரது தோழியாக நடித்துள்ள மதுமிதா, வழக்கம் போல் கலக்கியிருக்கிறார். பூனம் பஜ்வா நிறைய கிளாமர் காட்டி, ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். ஒவ்வொரு பாடல்களையும் ரசித்து ரசித்து கம்போஸ் செய்துள்ளார் ஜி.வி. அதிலும், 'எங்க ஊட்ல மீன் குழம்பு சோறு' பாடல் செம லோக்கல் பிளேவர். பின்னணி இசையும் சிறப்பு...