குருதி ஆட்டம் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, பிரியா பவானி ஷங்கர், ராதா ரவி, ராதிகா சரத்குமார் என பலர் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரையுலக பிரபல தயாரிப்பு நிறுவனமான ராக் போர்ட் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
காதல் - அதிரடி - திரில்லர் என தமிழ் சினிமா ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் அணில் க்ரிஷ் எடிட்டிங் செய்துள்ளார்.
இப்படம் 2020ஆம் ஆண்டு திரைக்கு வரவிருந்த நிலையில் சில காரணங்களால் தள்ளி செல்ல, பின் அடுத்தடுத்து இப்படம் வெளியாகாமல் தள்ளிச்சென்றுள்ளது, இறுதியாக குருதி ஆட்டம் திரைப்படம் பல போராட்டங்களுக்கு பின்னர் 2022, ஆகஸ்ட் 05ல் உலகமுழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
குருதி ஆட்டம் படத்தின் கதை
எதிரிகளாக இருந்து நண்பர்களாக மாறும் அதர்வா - கண்ணா ரவி நட்பை பிரிக்க சிலர் முயற்சி செய்கின்றனர். ஒரு கட்டத்தில் கண்ணா ரவி கொலை செய்யப்படுகிறார். கண்ணா ரவி மரணத்திற்கு அதர்வா பழிவாங்குவதே இப்படத்தின் கதை.