குஷி - இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா என பலர் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் நவீன் ஏர்னெனி தயாரிக்க, இசையமைப்பாளர் ஹிஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
காதல் படமாக உருவாகியுள்ள குஷி திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் முரளி ஜி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிராவின் புடி எடிட்டிங் செய்துள்ளார். குஷி திரைப்படம் தமிழ் & தெலுங்கு என இரு மொழி திரைப்படமாக 2023 செப்டம்பர் 01ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
குஷி திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு /ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இத்திரைப்படம் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகும் 11வது திரைப்படமாகும். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாகியுள்ளது.
குஷி திரைப்படத்தின் கதை
ஜம்மு காஸ்மீர் நகரில் சந்திக்கும் சமந்தா மற்றும் விஜய் காதலிக்க தொடங்குகின்றனர். சமந்தா இஸ்லாமிய பெண் என்று காதலிக்கும் விஜய், சமந்தா தமிழகத்தை சேர்ந்த பெண் மேலும் அவர் ஒரு ஹிந்து என தெரிய வருகிறது. பின்னர் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கும் பெற்றோர்கள் இவர்களின் ஜாதகம் சரியில்லை என பிரித்து வைக்கின்றனர்.
பெற்றோர்களின் சம்மதத்தை மீறி இவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ தொடங்குகின்றனர். பின் என்ன நடக்கிறது என்பது தான் குஷி திரைப்படத்தின் கதை.