X
குட்டி ஸ்டோரி
Drama | Romance | 12 Feb 2021 | U/A |
Tamil

குட்டி ஸ்டோரி கதை

குட்டி ஸ்டோரி - தமிழ் திரைப்பட பிரபல இயக்குனர்களான கவுதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி இணைந்து இயக்கியிருக்கும் ஒரு காதல் ஆந்தாலஜி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கிறார்.

விஜய் சேதுபதி, கவுதம் மேனன், மெகா ஆகாஷ், பிரேம்ஜி என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 12ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.


குட்டி ஸ்டோரி திரைப்படத்தின் கதை

1. எதிர்பாரா முத்தம்

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் இவரே நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம், இதில் அமலா பால், வினோத் கிஷான், ரோபோ ஷங்கர் என பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் கார்த்திக் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கதை: இளம் வயது கவுதம் மேனன் கதாபாத்திரத்தில் வினோத் கிஷான் நடித்துள்ளார். வினோத் கிஷான் மற்றும் அமலா பால் இருவரும் நல்ல நண்பர்கள் ஆவார்கள். தன் இல்லத்திற்கு மதிய உணவிற்காக அமலா பால்-யை அழைக்கும் வினோத் கிஷான், இறுதியில் அவர்க்கும் ஒரு முத்தம் தருகிறார். பின் அமலா பால் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டிற்கு செல்கிறார்.

பல வருடங்கள் கழித்தும் கவுதம் மேனன், இந்த எதிர்பாரா முத்தத்தை பற்றி தன் நண்பர்கள் மற்றும் மனைவியிடம் கூறி மகிழ்கிறார். ஒரு நாள் அமலா பால் வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார். பின் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.

2. அவனும் நானும்

இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அமிதாஷ் பிரதான், மேகா ஆகாஷ் நடித்திருக்கும் காதல் காவியம். இந்த படத்தினை ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யா, படத்தொகுப்பாளர் ஆன்டனி எடிட்டிங் செய்துள்ளார். இசையமைப்பாளர் மது இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மேகா ஆகாஷ் (ப்ரீத்தி) மற்றும் அமிதாஷ் பிரதான் (விக்ரம்), இருவரும் காதலிக்கின்றனர். சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிகின்றனர். ஆனால் இவர்களின் காதல் வெளிப்பாட்டின் காரணமாக  மேகா ஆகாஷ் கர்பமடைகிறார். இதனை அமிதாஷ்யிடம் தெரிவிக்க பல வழிகளில் முயற்சி செய்கிறார், மேகா ஆகாஷ். ஆனால் அமிதாஷ் பிரதான்யை தொடர்பு கொள்ள முடியவில்லை.

தனது தோழியின் அறிவுரை படி கருவினை கலைக்க முடிவெடுக்கும், மேகா மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு ஒரு விபத்தில் சிக்கி அமிதாஷ் உயிரிழந்ததை அறியும் மேகா ஆகாஷ் அதிர்ச்சிக்குள்ளாகிறார். பின் தனது கருவினை கலைக்காமல் திரும்புகிறார். பின் என்ன நடந்து என்பதே படத்தின் கதை.

3. லோகம்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரேம்ஜி இசையில் உருவாகியுள்ளது இப்படம். வருண், சாக்ஷி அகர்வால் மற்றும் சங்கீதா இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லோகம் என்ற ஒரு இணையதள விளையாட்டில் எதிர்பாராமல் இணையும் வருண் மற்றும் சாக்ஷி ஒன்றாக விளையாடுகின்றனர். அதில் இவர்களுக்குள் நடக்கும் சில உரையாடல்கள் வருணை சாக்ஷியை காதலிக்க தூண்டுகிறது. பின் சாக்ஷியை நேரில் பார்க்க ஆடைபடுகிறார் வருண், இறுதியில் அவரை சந்தித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.

4. ஆடல் பாடல்

இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, அதிதி பாலன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார்.

திருமணம் நடந்து ஒரு குழந்தையோடு வாழ்ந்து வருகின்றனர் விஜய் சேதுபதி மற்றும் அதிதி பாலன். விஜய் சேதுபதிக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருக்கிறது. இது ஒரு கட்டத்தில் மனைவி அதிதி பாலனுக்கு தெரியவர, இருவருக்கும் பெரிய சண்டை நடக்கிறது. பின் என நடந்து என்பதே படத்தின் எதார்த்தமான திரைக்கதை.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+