twitter

    லத்தி கதை

    லத்தி (லத்தி சார்ஜ்) - அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா, பிரபு என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தமிழ் நடிகர்களான ரமணா மற்றும் நந்தா இணைந்து 'ராணா புரொடக்ஷன்' என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    அதிரடி - திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பாலா சுப்பிரமணியம் மற்றும் பாலகிருஷ்ணா தோட்டா இணைந்து ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் எடிட்டிங் செய்துள்ளார்.
     
    2022 கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு நேரடியாக திரையரங்கில் வெளியாகியுள்ள இப்படத்தினை, தமிழ் சினிமா நடிகர் & தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் தன் 'ரெட் ஜெயன்ட் மூவீஸ்' நிறுவனத்தின் மூலம் உலகம் இப்படத்தினை விநியோகம் செய்துள்ளார். இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. 




    லத்தி திரைப்படத்தின் கதை

    கதைக்கரு

    ஒன்லைன்: ஒரு சாதாரண கான்ஸ்டபிள் தன்னையும், தன் குடும்பத்தையும் அதிகாரம் படைத்த சிலரிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறார், என்பதே படத்தின் கதைக்கரு.

    கதை

    கான்ஸ்டபிள் முருகானந்தம் (விஷால் கிருஷ்ணன்) ஒரு நேர்மையான காவல் அதிகாரி. ஒரு பெண் லவ் டார்ச்சர் கொடுப்பதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கிறார். விஷால் அந்த பையனை அழைத்து எச்சரித்து அனுப்புகிறார். பின் ஒரு சில நாளில் அந்த பெண் மர்மமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.

    இந்த கொலைக்கு கரணமாக அந்த இளைஞர் தான் இருக்கவேண்டும் என எண்ணி அந்த இளைஞர் அடித்து துவம்சம் செய்கிறார், விஷால். ஆனால் அந்த இளைஞர் குற்றவாளி இல்லை. விசாரிக்காமல் தாக்கிய குற்றத்திற்காக விஷால் ஒரு வருடம் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

    கான்ஸ்டபிள் விஷாலின் நன்னடத்தை காரணமாக 6 மாதத்தில் உயர் அதிகாரியான பிரபு மீண்டும் வேலையில் சேர்க்கிறார். பிரபுவின் மகளுக்கு வில்லனின் மகன் சில தொல்லைகள் செய்து வர, இதனை ரகசியமாக விசாரிக்கும் உரிமையை விஷாலுக்கு வழங்குகிறார், பிரபு.

    வில்லனின் மகனை விஷால் வெளுத்து வாங்க, இதனை பற்றி அறியும் வில்லன் விஷால் மற்றும் அவரின் குடும்பத்தை பழிவாங்க முயற்சி செய்கிறார். இறுதியில் என்ன ஆனது? விஷால் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் லத்தி திரைப்படத்தின் கதை.

    லத்தி திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள்

    லத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு 2021 ஆகஸ்ட் 29ல் சென்னையில் உள்ள திருவான்மியூர் அடுக்குமாடி கட்டிடத்தில் தொடங்கியது. இப்படத்தின் முதல் ஸ்செடில் 2021 செப்டம்பர் 14ல் நிறைவடைந்தது. பின் இப்படத்தின் இறுதி ஸ்செடில் ஹைதராபாத்-ல் நிறைவுபெற்றது.

    இப்படத்தின் படப்பிடிப்பு போது நடிகர் விஷாலுக்கு சில விபத்துகள் ஏற்பட்டு இவர் கைகளில் சிறிது காயங்கள் ஏற்பட்டது. இதற்காக இப்படத்தின் படப்பிடிப்பு சற்று தாமதமாக நடந்து முடிந்துள்ளது. 

    லத்தி திரைப்படத்தின் டப்பிங் பணிகள் மே 14, 2022ல் தொடங்கி இப்படம் முற்றிலுமாக 2022 ஜூலை 15ல் முடிக்கப்பட்டது.

    இப்படத்திற்கு முதலில் இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார், பின் சில காரணங்களால் அவரை நிராகரித்த படக்குழு, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா-வை இசையமைக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie லத்தி with us? Please send it to us ([email protected]).