லெட்ஸ் கெட் மேரேஜ் (LGM) - இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு, நதியா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் காதல் & நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை இந்திய கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி இணைந்து 'தோனி என்டர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இப்படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளருமான ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார்.
நகைச்சுவை மற்றும் காதல் கதையில் உருவாகியுள்ள லெட்ஸ் கெட் மேரேஜ் (LGM) திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங் செய்துள்ளார்.
லெட்ஸ் கெட் மேரேஜ் (LGM) திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ள நிலையில், இப்படம் 2023 ஜூலை 28ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக இந்திய கிரிக்கெட் வீரர் தோனி அவதரித்துள்ளார்.
லெட்ஸ் கெட் மேரேஜ் (LGM) திரைப்படத்தின் கதை
கதைக்கரு: சிறுவயதில்லையே அப்பாவை இழந்து அம்மாவின் அரவணைப்பில் செல்லப்பிள்ளையாக வாழ்ந்து வரும் ஹரிஷ், தான் காதலிக்கும் பெண்ணை வீட்டில் அறிமுகப்படுத்தி திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறார். காதலி தனியாக வாழ வேண்டும் என ஆசைப்பட்டு அதற்காக முயற்சிகள் எடுக்க, அம்மாவையும் காதலியையும் ஹரிஷ் எப்படி சேர்த்து வைத்தார் என்பதே படத்தின் கதை