twitter
    Tamil»Movies»Lisaa»Story

    லிசா கதை

    லிசா இயக்குனர் ராஜு விஸ்வநாத் இயக்கத்தில் அஞ்சலி நடிக்கும் த்ரில்லர் திகில் படம். இத்திரைப்படம் 3D படமாக உருவாகிறது. இத்திரைப்படத்தினை இயக்குனர் பி.ஜி.முத்தையா தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

    கதை 

    சிறுவயதிலேயே தந்தையை இழந்த அஞ்சலி தன் தாயுடன் நகரத்தில் வாழ்ந்துவருகிறார், படிப்பினை முடித்தபின் அமெரிக்காவிற்கு சென்று செட்டில் ஆகா வேண்டும் என்று விருப்பம் கொள்ளும் அஞ்சலி, அமெரிக்கா செல்வதற்கு ஆயுத்தமாகிறார். இவர் அமெரிக்காவிற்கு சென்றால் தாய் தனி மரமாவதை எண்ணி, தன் தாயை அவரது தாய் தந்தையுடன் கிராமத்தில் வாழவைக்க விருப்பம் கொண்டு தனது காதலருடன் கிராமத்தில் உள்ள தாத்தா பாட்டி வீட்டிற்கு செல்கிறார்.

    அங்கு ஒரு வயதான ஜோடியிடம் தாத்தா பாட்டி உறவினை கொண்டாடுகிறார், அஞ்சலி. பின்னர் எதிர்பாராத அமானுஷ்யங்களை உணர்கிறார் அவரின் காதலர், இதனை தொடக்கத்தில் பொருட்படுத்தி கொள்ளாத அஞ்சலி ஒரு நாள் வீட்டின் அருகில் கொலை செய்யப்பட்ட அழுகிய உடல்களை கண்டு பதறுகிறார்.

    பின்னர் அஞ்சலியை சுற்றியே சில அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதை உணரும் அஞ்சலி, அந்த வீட்டில் நடந்தது என்ன, பேய் யார், உண்மையில் அவரின் தாத்தா பாட்டி என்ன ஆனார்கள் என்னும் உண்மையை கண்டறிய நினைக்கிறார். இவர் இதனை கண்டறிந்தார்? இவரின் தாத்தா பாட்டி எங்கே? என்பதே படத்தின் கதைக்களம்.

    **Note:Hey! Would you like to share the story of the movie லிசா with us? Please send it to us ([email protected]).