X
லிசா

லிசா

Horror | 24 May 2019 | U/A | 111 Mins
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

லிசா கதை

லிசா இயக்குனர் ராஜு விஸ்வநாத் இயக்கத்தில் அஞ்சலி நடிக்கும் த்ரில்லர் திகில் படம். இத்திரைப்படம் 3D படமாக உருவாகிறது. இத்திரைப்படத்தினை இயக்குனர் பி.ஜி.முத்தையா தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். கதை  சிறுவயதிலேயே தந்தையை இழந்த அஞ்சலி தன் தாயுடன் நகரத்தில் வாழ்ந்துவருகிறார், படிப்பினை முடித்தபின் அமெரிக்காவிற்கு சென்று செட்டில் ஆகா வேண்டும் என்று விருப்பம் கொள்ளும் அஞ்சலி, அமெரிக்கா செல்வதற்கு ஆயுத்தமாகிறார். இவர் அமெரிக்காவிற்கு சென்றால் தாய் தனி மரமாவதை எண்ணி, தன் தாயை அவரது தாய் தந்தையுடன் கிராமத்தில் வாழவைக்க விருப்பம் கொண்டு தனது காதலருடன் கிராமத்தில் உள்ள தாத்தா பாட்டி வீட்டிற்கு செல்கிறார். அங்கு ஒரு வயதான ஜோடியிடம் தாத்தா பாட்டி உறவினை கொண்டாடுகிறார், அஞ்சலி. பின்னர் எதிர்பாராத அமானுஷ்யங்களை உணர்கிறார் அவரின் காதலர், இதனை தொடக்கத்தில் பொருட்படுத்தி கொள்ளாத அஞ்சலி ஒரு நாள் வீட்டின் அருகில் கொலை செய்யப்பட்ட அழுகிய உடல்களை கண்டு பதறுகிறார். பின்னர் அஞ்சலியை சுற்றியே சில அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதை உணரும் அஞ்சலி, அந்த வீட்டில் நடந்தது என்ன, பேய் யார், உண்மையில் அவரின் தாத்தா பாட்டி என்ன ஆனார்கள் என்னும் உண்மையை கண்டறிய நினைக்கிறார். இவர் இதனை கண்டறிந்தார்? இவரின் தாத்தா பாட்டி எங்கே? என்பதே படத்தின் கதைக்களம்.
Read More

லிசா நடிகர்கள் & படக்குழுவினர்

லிசா அணியின் தகவல்

இயக்குனர் ராஜு விஸ்வநாத்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சந்தோஷ் தயாநிதி
தயாரிப்பாளர் பி ஜி முத்தையா
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

லிசா விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
திறந்த கதவு தானா மூடுவது, சாய்வு நாற்காலி தானாக ஆடுவது, ஜன்னலில் கைரேகை படிவது, லைட், டிவி, டேப்ரெக்காடர் போன்றை தானாக இயங்குவது, 'வாம்மா மின்னல்' ரேஞ்சுக்கு ஒரு கருப்பு உருவம் சர்ரென ஓடுவது என வழக்கமான பேய் பட டெம்லேட் காட்சிகள் அனைத்தும் லிசாவில் உண்டு. என்ன ஒரே வித்தியாசம், அவை அனைத்தும் 3டி வடிவத்தில் வருகின்றன. பேய் படம் என்றாலே, யாராவது ரெண்டு பேர் ரோபோ போல் உடம்பை ஸ்டிப்பாக வைத்துக்கொண்டு நடப்பது, கரகரக் குரலில் பேசுவது போல் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இந்த படத்தில் லிசாவின் காட்டு பங்களா தாத்தா பாட்டி தான் இந்த கேரக்டர்ஸ். சாரா பாட்டிய சாதாரணமா பார்த்தாளே பயமா இருக்கு. 3டியில் இன்னும் டெரராக இருங்காங்க. படத்தோட திரைக்கதையில் நிறைய பிரச்சினைகள் இருக்கு. பயமுறுத்தவும் இல்லாம, இரக்கப்பட வைக்கவும் இல்லாம ஏனோ தானோன்னு படம் நகர்கிறது. பிளாஷ் பேக் காட்சிகளும் உருக்கமா இல்ல. இதனால மொத்தப் படமும் நசநசன்னு ஆகிடுது.

லிசா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

லிசா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+