X
LKG
Comedy | 22 Feb 2019 | U | 124 Mins
Tamil

LKG கதை

LKG அரசியல் சார்ந்த திரைப்படம். இத்திரைப்படத்தினை பிரபு இயக்க, ஆர் ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே கே ரிதீஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் இயக்குனர் பிரபு, பிரபு தேவாவிடம் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தவர். இப்படத்தினை ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் பிப்ரவரி 2-ல் "இளையராஜா 75'' விழாவில் மாலை 7 மணி அளவில் இத்திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. மேலும் இப்படத்தின் ஆ.தி.மு.க-வின் முன்னால் அமைச்சர் நாஞ்சில் சம்பத், மற்றும் தி.மு.க-வின் தமிழக பாராளுமன்ற உறுப்பினர் ஜே கே ரிதீஷ் நடித்துள்ளனர். 

கதை
 
லால்குடி கருப்பையா காந்தி என்கிற எல்.கே.ஜி (ஆர்ஜே பாலாஜி), இவரின் சொந்த ஊர் லால்குடி. இந்த ஊரின் கவுன்சிலராக தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். இப்படத்தில் இவர் தொடக்கத்தில் எப்படி கவுன்சிலராகிறார் என்பதையும், அதன் பிறகு எப்படி முதல்வராகிறார் என்பதை சித்தரிக்கிறது.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தின் தலைவராக வரும் ப்ரியா ஆனந்த், கருப்பையா காந்திக்கு அரசியலில் என்ன செய்தால் எப்படி வெற்றிப்பெறலாம் என்ற ஆலோசனை, அறிவுரை வழங்குகிறார். சமூக வலைதளம், டிவி, மீடியா ஆகியவற்றின் யுக்தியை ஆர்.ஜே.பாலாஜி தெரிந்து கொண்டு கச்சிதமாக பயன்படுத்திக் கொள்கிறார். 

இதனை அறிந்து கொள்ளும் துணை முதல்வர் போஜப்பன் (ராம்குமார்), முதல்வராக திட்டமிட்டமிடுகிறார். இந்த நிலையில், ஆர்.ஜே.பாலாஜியின் அரசியல் யுக்திகளை தனக்கு சாதமாக்கிக் கொள்ள முயற்சித்து, மறைந்த முதல்வர் தொகுதியில் வரும் இடைத்தேர்தலில் ஆர்.ஜே.பாலாஜியை களமிறக்குகிறார். ஆனால், அதே தொகுதியில் ராமராஜ் பாண்டியன் (ஜேகே ரித்தேஷ்) களமிறங்குகிறார். 

இந்த தேர்தலில் ஜெயிக்க ஆர்.ஜே.பாலாஜி என்ன செய்கிறார். இறுதியில் ராமராஜ் பாண்டியனை தோற்கடித்து தேர்தலில் ஜெயிச்சாரா இல்லையா என்பது தான் எல்கேஜி படம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+