twitter
    Tamil»Movies»LKG
    LKG

    LKG

    U | 2 hrs 4 mins | Comedy
    Release Date : 22 Feb 2019
    Director : பிரபு
    3.5/5
    Critics Rating
    3/5
    Audience Review
    LKG அரசியல் சார்ந்த திரைப்படம். இத்திரைப்படத்தினை பிரபு இயக்க, ஆர் ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே கே ரிதீஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் இயக்குனர் பிரபு, பிரபு தேவாவிடம் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தவர். இப்படத்தினை ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் ட்ரைலர் பிப்ரவரி 2-ல் "இளையராஜா 75'' விழாவில் மாலை 7 மணி அளவில் இத்திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. மேலும் இப்படத்தின் ஆ.தி.மு.க-வின் முன்னால் அமைச்சர் நாஞ்சில் சம்பத், மற்றும்...
    • பிரபு
      பிரபு
      Director
    • ஐசரி கே கணேஷ்
      ஐசரி கே கணேஷ்
      Producer
    • லியோன் ஜேம்ஸ்
      லியோன் ஜேம்ஸ்
      Music Director
    • பில்மிபீட்
      3.5/5
      பல்வேறு எதிர்பார்ப்பு மற்றும் எதிர்ப்புக்கு மத்தியில் 'லால்குடி கருப்பையா காந்தியாகிய நான்...' என தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆர்ஜே பாலாஜி பதவியேற்கும் காட்சியுடன் தொடங்குகிறது படம். லால்குடியில் ஒரு சாதாரண இளைஞான சுற்றித் திரிந்த ஆர்ஜே பாலாஜி, அரசியலில் நுழைந்து, முதலில் கவுன்சிலராகி பிறகு முதல்வராகிறார். இதற்காக அவர் கையாளும் வழிமுறைகள், யுக்திகள், சந்திக்கும் பிரச்சினைகளை சமகால அரசியலுடன் தொடர்புபடுத்தி நக்கல், நையாண்டியுடன் கூறுகிறது எல்கேஜி.

      தனது தந்தை நாஞ்சில் சம்பத் போல் பிழைக்க தெரியாத அரசியல்வாதியாக இல்லாமல், லால்குடியின் ஒரு வாட்டு கவுன்சிலராகிறார் பாலாஜி. மக்களை வெறும் வாக்காளர்களாக மட்டுமே நினைக்கும் பாலாஜி, அவர்களின் ஓட்டுக்களை கவர பல வேலைகள் செய்யும் அதேசமயம், குறுக்கு வழியில் பணமும் சம்பாதிக்கிறார். இப்படி நகர்ந்துகொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் அனந்த் வைத்தியநாதன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிகிறார். ஒருவேளை அவர் மரணமடைந்தால் லால்குடிக்கு இடைதேர்தல் வரும் என கணிக்கும் பாலாஜி, அந்த சீட்டைக்கு அடிபோடுகிறார்...