twitter

    மகாமுனி கதை

    மகாமுனி இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் அதிரடி மற்றும் திரில்லர் நடிக்கும் திரைப்படம், இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தனது ஸ்டூடியோ கிறீன் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். 

    படத்தை பற்றிய தகவல்கள்

    மகாமுனி படத்தின் இயக்குனரான சாந்தகுமார் இப்படத்திற்கு முன்பு மௌனகுரு திரைப்படத்தினை இயக்கி திரையுலகில் அறிமுகமானவர். இவர் சுமார் 8 ஆண்டுகள் கழித்து இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி தந்துள்ளார்.

    அதிரடி மற்றும் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன் மற்றும் பட தொகுப்பாளர் ஷாப்பு ஜோசப் இனைந்து பணியாற்றியுள்ளனர்.

    மகாமுனி திரைப்படத்தினை "ஒருவர் செய்யும் நல்ல விஷயங்களும், கேட்ட விஷயங்களும் அவர்களின் சந்ததியையே வந்து சேரும். மனிதன் அவர்களின் சந்ததிகளுக்கு விட்டுச்செல்வது நல்லதா? தீயதா?" என்பதே படத்தின் கரு. இந்த கதைக்கருவை மையமாக கொண்டு அதிரடி மற்றும் திரில்லர் திரைக்கதையாக உருவாக்கியுள்ளார் இப்படத்தின் இயக்குனர் சாந்தகுமார்.


    கதை

    உருவ ஒற்றுமை கொண்டுள்ள இரட்டியராக பிறக்கும் ஆர்யா - மகாராஜன் (மகா), முனிராஜன் (முனி) என்னும் பெயர் கொண்டு அறியப்படுகிறார். சிறுவயதில் இருந்தே சில வேறுபட்ட கருத்துகளுடன் வாழும் இவர்கள், தங்களின் பாதையினை தேர்ந்தேடுத்து பிரிகின்றனர். 

    மகராஜன் (மகா) தனது மனைவி இந்துஜா மற்றும் ஒரு குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். இவர் சென்னையில் ஒரு அரசியல்வாதிக்கு அடியாளாகவும், அந்த அரசியல்வாதி செய்யும் கொலைகளுக்கு திட்டம்போட்டு குடுப்பது போன்ற பணிகளை செய்துவருகிறார். இந்த வாழ்க்கையில் இருந்து வெளிவர வேண்டும் என்று நினைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக ஒரு கொலையில் இவரும் மாட்டி கொள்கிறார். அதற்காக நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் சிக்கி அலைந்து கொண்டிருக்கிறார்.

    முனிராஜன் (முனி) அமைதியை விரும்பும் ஒரு சாந்தசொரூபியான நபர். இவர் ஸ்வாமி விவேகானந்தர், வள்ளலார் போன்று திருமணம் செய்து கொள்ளாமல் ஆன்மீகத்தில் பயணிக்கும்பவர். ஆன்மீகத்தில் மக்களுக்கு உதவி செய்து வாழ நினைக்கும் இவருக்கு ஒரு பெண் ரூபத்தில் சாதிகளின் அடிப்படையில் ஒரு பிரச்சனை கிளம்புகிறது.

    வெவ்வேறு கோணத்தில் வெவ்வேறு வாழ்க்கையினை வாழும் இவர்கள் பிரச்சனையை எவ்வாறு எதிர்கொள்கின்றனர். என்பதே படத்தின் கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie மகாமுனி with us? Please send it to us ([email protected]).