X
மகாமுனி

மகாமுனி

Action | Drama | 06 Sep 2019 | U/A | 157 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

மகாமுனி கதை

மகாமுனி இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் அதிரடி மற்றும் திரில்லர் நடிக்கும் திரைப்படம், இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தனது ஸ்டூடியோ கிறீன் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.  படத்தை பற்றிய தகவல்கள் மகாமுனி படத்தின் இயக்குனரான சாந்தகுமார் இப்படத்திற்கு முன்பு மௌனகுரு திரைப்படத்தினை இயக்கி திரையுலகில் அறிமுகமானவர். இவர் சுமார் 8 ஆண்டுகள் கழித்து இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி தந்துள்ளார். அதிரடி மற்றும் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன் மற்றும் பட தொகுப்பாளர் ஷாப்பு ஜோசப் இனைந்து பணியாற்றியுள்ளனர். மகாமுனி திரைப்படத்தினை " ஒருவர் செய்யும் நல்ல விஷயங்களும், கேட்ட விஷயங்களும் அவர்களின் சந்ததியையே வந்து சேரும். மனிதன் அவர்களின் சந்ததிகளுக்கு விட்டுச்செல்வது நல்லதா? தீயதா? " என்பதே படத்தின் கரு. இந்த கதைக்கருவை மையமாக கொண்டு அதிரடி மற்றும் திரில்லர் திரைக்கதையாக உருவாக்கியுள்ளார் இப்படத்தின் இயக்குனர் சாந்தகுமார். படக்குழு :  இப்படத்தில் பணியாற்றிருக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை பற்றி அறிய புகைப்படங்கள் :  மகாமுனி திரைப்படத்தின் புகைப்படங்களுக்கு கதை உருவ ஒற்றுமை கொண்டுள்ள இரட்டியராக பிறக்கும் ஆர்யா - மகாராஜன் (மகா), முனிராஜன் (முனி) என்னும் பெயர் கொண்டு அறியப்படுகிறார். சிறுவயதில் இருந்தே சில வேறுபட்ட கருத்துகளுடன் வாழும் இவர்கள், தங்களின் பாதையினை தேர்ந்தேடுத்து பிரிகின்றனர்.  மகராஜன் (மகா) தனது மனைவி இந்துஜா மற்றும் ஒரு குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். இவர் சென்னையில் ஒரு அரசியல்வாதிக்கு அடியாளாகவும், அந்த அரசியல்வாதி செய்யும் கொலைகளுக்கு திட்டம்போட்டு குடுப்பது போன்ற பணிகளை செய்துவருகிறார். இந்த வாழ்க்கையில் இருந்து வெளிவர வேண்டும் என்று நினைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக ஒரு கொலையில் இவரும் மாட்டி கொள்கிறார். அதற்காக நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் சிக்கி அலைந்து கொண்டிருக்கிறார். முனிராஜன் (முனி) அமைதியை விரும்பும் ஒரு சாந்தசொரூபியான நபர். இவர் ஸ்வாமி விவேகானந்தர், வள்ளலார் போன்று திருமணம் செய்து கொள்ளாமல் ஆன்மீகத்தில் பயணிக்கும்பவர். ஆன்மீகத்தில் மக்களுக்கு உதவி செய்து வாழ நினைக்கும் இவருக்கு ஒரு பெண் ரூபத்தில் சாதிகளின் அடிப்படையில் ஒரு பிரச்சனை கிளம்புகிறது. வெவ்வேறு கோணத்தில் வெவ்வேறு வாழ்க்கையினை வாழும் இவர்கள் பிரச்சனையை எவ்வாறு எதிர்கொள்கின்றனர். என்பதே படத்தின் கதை.
Read More

மகாமுனி நடிகர்கள் & படக்குழுவினர்

மகாமுனி அணியின் தகவல்

இயக்குனர் சாந்தகுமார்
ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன்
தொகுப்பாளர் சபு ஜொஸ்ப் வி ஜே
இசை எஸ் தமன்
தயாரிப்பாளர் கே இ ஞானவேல் ராஜா
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

மகாமுனி விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
மௌனகுரு படத்திற்குப் பின் எட்டு ஆண்டுகள் கழித்து இந்த மகாமுனியைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார். அவரது எட்டு வருட உழைப்பு வீண் போகவில்லை என்பது ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. மனதில் தோன்றியதை அப்படியே காட்சியாக்கி இருக்கிறார். பல்வேறு விஷயங்கள் குறித்து படத்தில் பேசியிருக்கிறார். இயக்குனருக்கு போலீஸ் மீது தீராத கோபம் இருக்கும் போல. மௌனகுருவை போல் இதிலும் காவல்துறையை கல்ப்ரிட் ஆக்கியிருக்கிறார்.

மகாமுனி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

மகாமுனி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+