அடிதூள்... சர்வதேச விழாவில் 9 பிரிவுகளில் நாமினேட் ஆன மகாமுனி
சென்னை : டைரக்டர் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா ரவிச்சந்திரன், மகிமா நம்பியார் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் மகாமுனி. இந்த படம் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் 9 பிரிவுகளின் கீழ் விருதுக்காக நாமினேட் ஆகி உள்ளது.
Recommended Video
க்ரைம், த்ரில்லர் படமான மகாமுனி படத்தை சாந்தகுமார் எழுதி, இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஆர்யா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக இந்துஜா மற்றும் மகிமா நம்பியார் நடித்திருந்தனர். 2019 ம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் ஏற்கனவே பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

தற்போது, வெளிநாட்டு மொழி திரைப்பட சிறந்த நடிகர்(ஆர்யா), வெளிநாட்டு மொழி திரைப்பட சிறந்த நடிகை (இந்துஜா ரவிச்சந்திரன்), சிறந்த துணை நடிகை (மகிமா நம்பியார்), சிறந்த பின்னணி இசை (தமான்), வெளிநாட்டு மொழி திரைப்பட சிறந்த ஒளிப்பதிவாளர் (அருண் பத்மநாபன்), வெளிநாட்டு மொழி திரைப்பட சிறந்த எடிட்டிங் (சாம்பு ஜோசப்), வெளிநாட்டு மொழி திரைப்பட சிறந்த திரைக்கதை (சாந்தகுமார்), ஜுரி விருது (சாந்தகுமார்), வெளிநாட்டு மொழி சிறந்த திரைப்படம் (மகாமுனி) என மொத்தம் 9 பிரிவுகளில் விருதுக்காக மகாமுனி படம் நாமினேட் செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் டைரக்டர் சாந்தகுமார். அதில் அவர், இங்கிலாந்து சர்வதேச திரைப்பட விழாவில் மகாமுனி படம் 9 பிரிவுகளில் நாமினேட் ஆகி உள்ளது. திரைப்படங்கள் திரையீடு மற்றும் விருது வழங்கும் விழா நவம்பர் 9 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை லண்டனில் நடைபெற உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படம் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டாலும், அனைத்து தரப்பினரிடமும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. ஆர்யா நடித்த முதல் பிளாக்பஸ்டர் படமாக சார்பட்டா பரம்பரை படம் அமைந்துள்ளது.

ஆர்யா நடிப்பில் நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருக்கும் சுந்தர்.சி.,யின் அரண்மனை 3 படமும் அக்டோபர் 14 ம் தேதி ஆயுதபூஜையை முன்னிட்டு தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஆர்யா முதல் முறையாக பேயாக நடித்துள்ள படம் இது. ஆர்யா முதல் முறையாக வில்லனாக நடிக்கும் விஷாலின் எனிமி படமும் விரைவில் ரிலீசாக உள்ளது.
இப்படி அடுத்தடுத்து வெற்றிகள் குவிந்து வரும் நிலையில் ஆர்யாவின் மகாமுனி படமும் சர்வதேச விருதிற்காக தேர்வாகி உள்ளது. நாமினேட் ஆகி உள்ள 9 பிரிவுகளில் எத்தனை பிரிவுகளில் மகாமுனி படம் விருதுகளை வெல்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











