மணல் கயிறு 2 கதை

  மணல் கயிறு 1982-ம் ஆண்டு விசு இயக்கத்தில் வெளிவந்த நகைச்சுவை குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தினை இரண்டாம் பாகமாக மணல்கயிறு 2 என்று இயக்குனர் மதன் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த எஸ் வி சேகர், விசு, சூரியகோஸ் ஆகியோர் அதே  கதாப்பாத்திரத்திலும், பூர்ண, அஸ்வின் சேகர், சாம்ஸ், எம் எஸ் பாஸ்கர், ஜெகன் மற்றும் பல நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்துள்ளனர். பல வருடங்களுக்கு பிறகு விசு மற்றும் எஸ் வி சேகர் இப்படத்தில் ஒன்று சேர்ந்து நடித்துள்ளனர். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

  கதை : 

  1982 -ல் வெளிவந்த மணல் கயிறு படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ளது இப்படம். எஸ் வி சேகரின் மகள் பூர்ணா தான் திருமணமே செய்துகொள்ள போவதில்லை என்று பிடிவாதமாக இருக்கிறார். தன்னுடைய மகளுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று எஸ் வி சேகர் மாரடைப்பு வந்தாற்போல் நடித்து, பூர்ணாவை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார். 

  பூர்ணா, தனக்கு வரப்போகும் கணவன் இப்படி தான் இருக்க வேண்டும் என்று தன் தந்தையை போல் இவரும் 8 கண்டிஷன் போடுகிறார். தான் போடும் 8 கண்டிஷனுக்கு யார் ஒத்துக்கொள்கின்றாரோ அவரையே தான் திருமணம் செய்து கொள்வதாக கூறுகிறார். 

  பூர்ணாவிற்கு வரன் தேடி பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்து இன்டர்வியூ எடுக்கிறார் எஸ் வி சேகர். அதில், எப்படியோ தேர்வாகிவிடுகிறார் சாம்ஸ். இதை அறிந்த விசு அவருடைய திருவிளையாடலை ஆரம்பிக்கிறார். பூர்ணாவின் அம்மாவான ஜெயஸ்ரீயின் அன்னான் மகன் அஷ்வினை பூர்ணாவிற்கு திருமணம் செய்து விட்டு போன சொந்தத்தை ஒன்று சேர்க்க நினைக்கிறார். 

  விசுவின் திட்டம் படியே திருமணமும் நடக்கிறது. அதற்க்கு பிறகு பூர்ணாவிற்கு உண்மை தெரிய வர இருவரின் வாழ்க்கையிலும் ஒரு பெரும் திருப்பம் உருவாகிறது. இறுதியில் இவர்கள் வாழ்க்கையில் எவ்வாறு ஒன்று சேருகின்றனர் என்பதே மீதிக்கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie மணல் கயிறு 2 with us? Please send it to us (popcorn@oneindia.co.in).