X
தமிழ் » திரைப்படங்கள் » மணல் கயிறு 2
மணல் கயிறு 2

மணல் கயிறு 2

Drama | 23 Dec 2016 | U |
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

மணல் கயிறு 2 கதை

மணல் கயிறு 1982-ம் ஆண்டு விசு இயக்கத்தில் வெளிவந்த நகைச்சுவை குடும்பத் திரைப்படம். இத்திரைப்படத்தினை இரண்டாம் பாகமாக மணல்கயிறு 2 என்று இயக்குனர் மதன் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த எஸ் வி சேகர், விசு, சூரியகோஸ் ஆகியோர் அதே  கதாப்பாத்திரத்திலும், பூர்ண, அஸ்வின் சேகர், சாம்ஸ், எம் எஸ் பாஸ்கர், ஜெகன் மற்றும் பல நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்துள்ளனர். பல வருடங்களுக்கு பிறகு விசு மற்றும் எஸ் வி சேகர் இப்படத்தில் ஒன்று சேர்ந்து நடித்துள்ளனர். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். கதை :  1982 -ல் வெளிவந்த மணல் கயிறு படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ளது இப்படம். எஸ் வி சேகரின் மகள் பூர்ணா தான் திருமணமே செய்துகொள்ள போவதில்லை என்று பிடிவாதமாக இருக்கிறார். தன்னுடைய மகளுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று எஸ் வி சேகர் மாரடைப்பு வந்தாற்போல் நடித்து, பூர்ணாவை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.  பூர்ணா, தனக்கு வரப்போகும் கணவன் இப்படி தான் இருக்க வேண்டும் என்று தன் தந்தையை போல் இவரும் 8 கண்டிஷன் போடுகிறார். தான் போடும் 8 கண்டிஷனுக்கு யார் ஒத்துக்கொள்கின்றாரோ அவரையே தான் திருமணம் செய்து கொள்வதாக கூறுகிறார்.  பூர்ணாவிற்கு வரன் தேடி பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்து இன்டர்வியூ எடுக்கிறார் எஸ் வி சேகர். அதில், எப்படியோ தேர்வாகிவிடுகிறார் சாம்ஸ். இதை அறிந்த விசு அவருடைய திருவிளையாடலை ஆரம்பிக்கிறார். பூர்ணாவின் அம்மாவான ஜெயஸ்ரீயின் அன்னான் மகன் அஷ்வினை பூர்ணாவிற்கு திருமணம் செய்து விட்டு போன சொந்தத்தை ஒன்று சேர்க்க நினைக்கிறார்.  விசுவின் திட்டம் படியே திருமணமும் நடக்கிறது. அதற்க்கு பிறகு பூர்ணாவிற்கு உண்மை தெரிய வர இருவரின் வாழ்க்கையிலும் ஒரு பெரும் திருப்பம் உருவாகிறது. இறுதியில் இவர்கள் வாழ்க்கையில் எவ்வாறு ஒன்று சேருகின்றனர் என்பதே மீதிக்கதை.
Read More

மணல் கயிறு 2 நடிகர்கள் & படக்குழுவினர்

மணல் கயிறு 2 அணியின் தகவல்

இயக்குனர் மதன் குமார்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை தரன்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

மணல் கயிறு 2 விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
மணல் கயிறு முதல் பாகம் பார்த்திருக்கிறீர்களா? தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணுக்கு 8 நிபந்தனைகள் வைத்து அட்ராசிட்டி பண்ணும் கிட்டுமணியை (எஸ்வி சேகர்) சாமர்த்தியமாக ஏமாற்றி, அந்த எட்டு நிபந்தனைகளுக்குமே பொருந்தாத ஒரு பெண்ணைக் கட்டி வைத்து, ஜகஜ்ஜால வேலை பார்ப்பார் நாரதர் நாயுடுவாக வரும் விசு. இப்போது அதன் தொடர்ச்சி... இரண்டாம் பாகம் என்றால்... இது பக்காவான இரண்டாம் பாகம். புத்திசாலித்தனமாக திரைக்கதையின் தொடர்ச்சியைப் பின்னியிருக்கிறார்கள் அஸ்வின், ஜெகன், ஜார்ஜ் கூட்டணியில் உருவாகி வெளியாகும் அந்த விளம்பர வீடியோக்கள் செம கலகல. அஸ்வின் இந்தப் படத்தில் தேறிவிட்டார். எஸ்வி சேகரைப் போலவே டைமிங் காமெடி செய்யவும் முயற்சித்திருக்கிறார். எஸ்வி சேகர், விசு, சுவாமிநாதன், சாம்ஸ் ஆகிய இந்த நால்வரும் படத்துக்கு பலம். குறிப்பாக விசு. 34 ஆண்டுகள் கழித்து வரும் ஒரு படத்தின் இரண்டாம் பாகத்திலும், அந்த முதல் பாகத்தில் தந்த கலகலப்பைத் தவறவில்லை மனிதர். நாயகி பூர்ணாவுக்கு கச்சிதமான வேடம், நல்ல நடிப்பைத் தந்திருக்கிறார். அழகு, நல்ல நடிப்புத் திறமை எல்லாம் இருந்தும் ஏன் இத்தனை நாட்களாக இவர் க்ளிக்காகவில்லை என்று தெரியவில்லை. முதல் பாகத்தில் நடித்த சாந்தி கிருஷ்ணா வேடத்தில் ஜெயஸ்ரீ. பிரமாதமாக நடித்திருக்கிறார். 'சுதந்திரத்திற்கும், விடுதலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. எது தனி மனித சுதந்திரம்.. எது கடமை என்பதை தம்பதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இதைச் செய்தாலே குடும்பத்தில் குழப்பமும் வராது.. டைவர்ஸ் என்கிற பேச்சும் வராது' - இது படத்தில் விசு சொல்லும் வசனம். இந்தத் தலைமுறை மனதில் கொள்ள வேண்டிய வசனம். மணல் கயிறு முதல் பாகத்தை சரியாக உள்வாங்கிக் கொண்டு சரியாகவே இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதை அமைத்திருக்கிறார் எஸ்வி சேகர். இயக்குநர் மதன்குமார் அதை கலகலப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். ஆனால் முதல் பாதியை விட நாடகத்தனம் அதிகமாகவே தெரிகிறது இரண்டாம் பாகத்தில். அதைத் தவிர்த்திருக்கலாம்.

மணல் கயிறு 2 திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

மணல் கயிறு 2

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+