»   »   »  மணல் கயிறு 2... அப்பாவைப் போலவே 8 கண்டிஷன் போடும் மகளாக பூர்ணா- வீடியோ

மணல் கயிறு 2... அப்பாவைப் போலவே 8 கண்டிஷன் போடும் மகளாக பூர்ணா- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 34 வருடங்களுக்கு முன்னாள், விசுவின் இயக்கத்தில், எஸ்.வி.சேகர் நடித்து ஹிட்டான படம் 'மணல் கயிறு'. தற்போது, அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் எஸ்.வி.சேகர் மகன் அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ளார். இப்பட்த்திற்கு எஸ்.வி.சேகர் கதை, திரைக்கதை எழுத, யாருடா மகேஷ் படத்தை இயக்கிய மதன்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய எஸ்.வி.சேகர், "எப்படி விசு இல்லாமல் அந்த மணல்கயிறு இல்லையோ அதே மாதிரி விசு இல்லாமல் இந்த மணல்கயிறும் இருக்ககூடாதுனு, அவருக்கு உடம்பு சரியில்லை என்றாலும் அவருக்காக வெயிட் பண்ணி, உடம்பு சரியானதும் இந்த படத்தில் நடிக்க வைத்தோம்" என்றார். முதல்பாகத்தில் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிற பெண் எப்படி இருக்க வேண்டும் என எஸ்.வி.சேகர் எப்படி 8 கண்டிசன்கள் போடுவாரோ, அதேபோல் இந்த இரண்டாம் பாகத்தில் அவரது மகளாக நடித்துள்ள பூர்ணா 8 கண்டிஷன் போடுகிறாராம்.

English summary
Actor S. Ve. Shekhar's son Aswin starring Manal Kayiru 2 movie's audio launch held in Chennai.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil