»   »  34 வருடங்களுக்குப் பின்... மீண்டும் மக்களின் வயிறுகளைப் புண்ணாக்க தயாராகிறது... மணல் கயிறு 2!

34 வருடங்களுக்குப் பின்... மீண்டும் மக்களின் வயிறுகளைப் புண்ணாக்க தயாராகிறது... மணல் கயிறு 2!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மணல்கயிறு படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்புகள் சென்னையில் தொடங்கியுள்ளன.

கடந்த 1982ம் ஆண்டு விசு இயக்கத்தில் எஸ்.வி.சேகர், மனோரமா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படம் மணல் கயிறு.

திருமணத்திற்காக பெண் தேடும் இளைஞர் ஒருவர், அதற்காக போடும் எட்டு கட்டளைகளைப் பற்றியது தான் கதைக்களம்.

மணல்கயிறு...

மணல்கயிறு...

ஆனால், அவர் எதிர்பார்த்தபடி பெண் கிடைக்காத நிலையில், அவர் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்படுகிறார் என்பதை காட்சிகளில் நகைச்சுவையாக சொல்லியிருப்பார் விசு.

நாரதர் நாயுடு...

நாரதர் நாயுடு...

இந்தப்படத்தில் நாரதர் நாயுடுவாக விசுவும், கிட்டு மணியாக எஸ்.வி.சேகரும் நடித்திருந்தனர். எஸ்.வி.சேகருக்கு அக்காவாக மனோரமா நடித்திருந்தார்.

இரண்டாம் பாகம்...

இரண்டாம் பாகம்...

வெற்றிப்படமாக இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படமாக்கப்படுகிறது. யாருடா மகேஷ் படத்தை இயக்கிய மதன்குமார் இப்படத்தை இயக்குகிறார்.

அஸ்வின் குமார்...

அஸ்வின் குமார்...

எஸ்.வி.சேகரின் மகனான நடிகர் அஸ்வின் குமார் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். பூர்ணா அவருக்கு ஜோடி.

நகைச்சுவைக் கூட்டணி...

நகைச்சுவைக் கூட்டணி...

முதல் பாகத்தில் நடித்த அதே கதாபாத்திரப் பெயரிலேயே இப்படத்திலும் எஸ்.வி.சேகர் மற்றும் விசு நடிக்க உள்ளனர். தேனாண்டாள் பிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

மீண்டும் விசு...

மீண்டும் விசு...

நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாகத் தொடங்கியது. சமீபகாலமாக படங்களில் நடிப்பதைக் குறைத்துவிட்ட விசு, மீண்டும் இப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Director-actor Visu and actor S.Ve.Sheker's classic comedy film 'Manal Kayiru'. Yesterday the shooting of 'Manal Kayiru 2' has started. The sequel which will have S.Ve.Sekher's son and actor Ashwin Shekher in the lead role will be directed by Madhan Kumar of 'Yaaruda Mahesh' fame.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil