மண்டேலா கதை

  மண்டேலா இயக்குனர் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு நாயகனாக நடிக்கும் நகைச்சுவை மற்றும் சமூக கருத்துக்கள் உள்ளடங்கிய திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சஷிகாந்த் மற்றும் மாரி பட இயக்குனர் பாலாஜி மோகன் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.  மண்டேலா திரைப்படத்தின் கதை

  கதைக்கரு: வடக்கூர் - தெற்கூர் என இரண்டு இடங்கள் உள்ளன. அங்கு ஊராட்சி தலைவருக்கான (பிரசிடெண்ட் எலக்ஷன்) தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அதற்காக நடக்கும் ஒரு மசாலா நகைச்சுவை திரைப்படம் தான் மண்டேலா படத்தின் கதைக்கரு. இந்த கதையில் நாயகனாக யோகிபாபு நடிக்கிறார்.

  கதை 

  சூரங்குடி என்ற கிராமம், வடக்கூர் - தெற்கூர் என இரண்டு இடங்களாக பிரிந்து கிடக்கிறது. ஒரு சமூகத்தினர் வடக்கூர் இடத்திலும், மற்றொரு சமூகத்தினர் தெற்கூர் இடத்திலும் இருந்து வாழ்ந்து வருகின்றனர். அந்த ஊர் தலைவராக உள்ள சங்கிலி முருகன், முதுமை காரணமாக ஓய்வு பெற விரும்புகிறார்.

  அச்சமயம் அந்த சூரங்குடி கிராமத்திற்கு (பிரசிடெண்ட் எலக்ஷன்) ஊராட்சி தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்படுகிறது. சங்கிலி முருகன் ஓய்வு பெற விரும்புவதால், அந்த தலைவர் இடத்திற்கு வடக்கூர் - தெற்கூர் சமூகத்தில் இருந்து ஜி.எம். சுந்தர் மற்றும் கண்ணா ரவி இருவரும் போட்டியிட விரும்புகின்றனர்.

  இருவரும் சங்கிலி முருகன் ஆலோசனை படி வேட்புமனு தாக்கல் செய்து, தங்களின் பிரச்சாரத்தை தொடங்குகின்றனர். இருவரும் போட்டி போட்டு பல யுக்திகளை கையாண்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். ஆனால் இரு சமூகத்தினர் வாக்குகள் ஒரே அளவு உள்ளதால் வெற்றி வாய்ப்புக்காக இருவரும் என்ன செய்வது என்று அறியாமல் உள்ளனர்.

  அப்போது அந்த ஊரில் தனக்கென ஒரு வீடு கூட இல்லாமல், மரத்திற்கு அடியில் தங்கி சலூன் தொழில் செய்துவரும் யோகி பாபு (மண்டேலா)-விற்கு ஓட்டு உரிமைக்கான அடையாள அட்டை வருகிறது. பின் தேர்தலுக்கு போட்டியிட்ட இந்த இரண்டு வேட்பாளர்களும், யோகிபாபுவின் ஓட்டுக்காக யோகிபாபுவிற்கு மாரி மாரி பல சேவைகள் செய்து கவர்கின்றன.

  இறுதியில் யோகிபாபுவின் ஓட்டு யாருக்கு ? என்பதே படத்தின் கதை. இந்த கதையை நகைச்சுவை பாணியில் சமூக கருத்துகளை உள்ளடக்கி ஒரு சுவாரஸ்ய திரைக்கதையாக வடிவமைத்து உருவாக்கியுள்ளனர், படக்குழுவினர்.

  மண்டேலா திரைப்படத்தின் தகவல்கள்

  நகைச்சுவை படமாக உருவாகிவுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா மற்றும் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் இணைந்து பணியாற்றியுள்ளனர். இத்திரைப்படத்தின் இயக்குனர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர்.

  மண்டேலா திரைப்படம் நேரடியாக தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் 2021 ஏப்ரல் 4ஆம் நாள் ஒளிபரப்பப்படுகிறது. பின் ஏப்ரல் 5ல் இணையதள ஆன்லைன் ஓடிடி தளமான 'நெட்பிளிக்ஸ்' தளத்தில் வெளியாகிறது.
  **Note:Hey! Would you like to share the story of the movie மண்டேலா with us? Please send it to us (popcorn@oneindia.co.in).