மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன இயக்குனர் ஆர் ராகேஷ் இயக்கத்தில் துருவா, ஐஸ்வர்யா தத்தா, ராதாரவி, ஜெ டி சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்த அதிரடி க்ரைம் திரைப்படம்.வ இத்திரைப்பத்தினை மதியழகன் தயாரிக்க, இப்படத்திற்கு அச்சு இசையமைத்துள்ளார்.
கதை :
ஒரு கேஸ் ஏஜென்சியில் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை பார்க்கிறார் நாயகன் ஜப்பான் (துருவா). செயின் பறிக்கும் கும்பலை சேர்ந்த ராமிடம் மோதி, பின்னர் மைம் கோபியின் சிபாரிசின் பேரில் அந்த கும்பலில் இணைகிறார். எப்படி எல்லாம் செயின் பறிக்க வேண்டும், ராமும், மைம் கோபியும் ஜப்பானுக்கு பயிற்சி தருகிறார்கள். ஓருகட்டத்தில் நன்றாக பயிற்சி பெறும் ஜப்பான், தனியாக செயின் பறிக்க செல்கிறார். போலீஸ் கமிஷ்னர் மணைவியின் செயினை ஜப்பான் பறிக்கும் போது எதிர்பாரதவிதமாக தடுமாறி கீழே விழ, அவரது முகம் அடையாளம் காணப்படுகிறது. இதையடுத்து, போலீஸ் அதிகாரி சக்ரவர்த்தியிடம் செயின் பறிக்கும் கும்பலை எண்கவுண்டர் செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறுது. செயின் பறிக்கும் கும்பல் எண்கவுண்டர் செய்யப்பட்டதா... நாயகன் ஜப்பான் யார், எதற்காக செயின் பறிக்கும் கும்பலில் இணைந்தார் என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை தேடி பயணிக்கிறது மீதிக்கதை.