X
தமிழ் » திரைப்படங்கள் » மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன

Action | 17 Aug 2018 | U/A | 114 Mins
Tamil

2.7 /5 Users

3 /5 Filmibeat

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன கதை

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன இயக்குனர் ஆர் ராகேஷ் இயக்கத்தில் துருவா, ஐஸ்வர்யா தத்தா, ராதாரவி, ஜெ டி சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்த அதிரடி க்ரைம் திரைப்படம்.வ இத்திரைப்பத்தினை மதியழகன் தயாரிக்க, இப்படத்திற்கு அச்சு இசையமைத்துள்ளார். கதை :  ஒரு கேஸ் ஏஜென்சியில் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை பார்க்கிறார் நாயகன் ஜப்பான் (துருவா). செயின் பறிக்கும் கும்பலை சேர்ந்த ராமிடம் மோதி, பின்னர் மைம் கோபியின் சிபாரிசின் பேரில் அந்த கும்பலில் இணைகிறார். எப்படி எல்லாம் செயின் பறிக்க வேண்டும், ராமும், மைம் கோபியும் ஜப்பானுக்கு பயிற்சி தருகிறார்கள். ஓருகட்டத்தில் நன்றாக பயிற்சி பெறும் ஜப்பான், தனியாக செயின் பறிக்க செல்கிறார். போலீஸ் கமிஷ்னர் மணைவியின் செயினை ஜப்பான் பறிக்கும் போது எதிர்பாரதவிதமாக தடுமாறி கீழே விழ, அவரது முகம் அடையாளம் காணப்படுகிறது. இதையடுத்து, போலீஸ் அதிகாரி சக்ரவர்த்தியிடம் செயின் பறிக்கும் கும்பலை எண்கவுண்டர் செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறுது. செயின் பறிக்கும் கும்பல் எண்கவுண்டர் செய்யப்பட்டதா... நாயகன் ஜப்பான் யார், எதற்காக செயின் பறிக்கும் கும்பலில் இணைந்தார்  என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை தேடி பயணிக்கிறது மீதிக்கதை.
Read More

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன நடிகர்கள் & படக்குழுவினர்

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன அணியின் தகவல்

இயக்குனர் ஆர் ராகேஷ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
தமிழ்நாட்டில் நாம் தினமும் செய்தியில் பார்க்கும் செயின் பறிப்பு சம்பவங்களுக்கு பின் இருக்கும் வலியையும், வேதனையையும் திரில்லிங் திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராஹேஷ். இரவில் நடமாட பெண்கள் பயந்த காலம் போய், இன்று பகலிலேயே பாதுகாப்பு இல்லை என்பதை உறக்க சொல்லியிருக்கிறார். நல்ல கதை கரு, வசனங்கள் இருந்தாலும், படத்தின் திரைக்கதையில் இயக்குனர் இன்னும் கவனம் செலுத்தியிக்கலாம். முதல் இரண்டு மூன்று காட்சிகளிலேயே கதையை யூகித்துவிட முடிகிறது. ஆனால் சொல்ல வந்த விஷயத்தை நேர்த்தியாகவும், நேர்மையாகவும் சொல்லியிருக்கிறார். சில காட்சிகள் 'மெட்ரோ' படத்தை நினைவூட்டுகிறது. ஆனால் அந்த படம் அளவுக்கு செயின் பறிக்கும் நுட்பங்கள் குறித்து வகுப்பெடுக்காமல் இருந்ததற்கும், ஆபாசம் இல்லாமல் படத்தை கொடுத்ததற்கும் நன்றி. போலீஸ் வேலையில் சேர்வதற்காக பயிற்சி எடுக்கும் பாரதியாக ஐஸ்வர்யாக தத்தா. ஒரு சில காட்சிகள் தான் என்றாலும் நிறைவாக செய்திருக்கிறார். பிக் வீட்டில் இருக்கும் அவருக்கு படம் ரிலீசானது தெரியாமல் இருக்கலாம். ஆனால் அந்த வீட்டுக்குள் இருப்பதாலேயே, ஐஸ்வர்யா தத்தாவை உடனடியாக அடையாளம் கண்டுகொள்கின்றனர் ரசிகர்கள். ஹீரோ யார், எதற்காக இதையெல்லாம் செய்கிறார் என்பதை பார்வையாளர்கள் யூகித்துவிட கூடாது என்பதற்காக படத்தில் நிறைய கேரக்டர்களை சேர்க்கிறார் இயக்குனர். பெண்களின் மிகப்பெரிய சந்தோஷமாக விளங்கும் தங்க நகைகளை அவர்கள் தைரியமாக அணிய முடியாதபடி செய்கிறார்களே என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார். சிசிடிவி கேமராவின் அவசியத்தையும் சொல்கிறது மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன.

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.7 /5 Your Rating

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+