மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் கதை

  மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் இயக்குனர் சரண் இயக்கத்தில் ஆரவ், காவ்யா தாபர், ராதிகா சரத்குமார் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் மோகன் தயாரிப்பில், ஒளிப்பதிவாளர் குகன் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளர் சைமன் கே கிங் இசையமைத்துள்ளார்.

  மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தினை பற்றிய தகவல்கள்

  பிக் பாஸ் பிரபலம் இப்படத்தின் நாயகன் ஆரவுக்கு ஜோடியாக காவ்யா தாபர் நடிக்க, ஆரவுக்கு அம்மாவாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ராதிகா சரத்குமார் டான் கதாபாத்திரத்திதை ஏற்று நடித்துள்ளார்.

  இத்திரைப்படத்தின் இயக்குனர் சரண் இதற்கு முன்பாக தல அஜித்-யின் அட்டகாசம், அமர்க்களம், அசல் ஆகிய திரைப்படங்களும் கமலின் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தையும் இயக்கிய பிரபல தமிழ் திரையுலக இயக்குனர் ஆவார். மார்க்கெட் ராஜா படத்திற்கு இவரின் தம்பி குகன் ஒளிப்பதிவாளராக இத்திரைப்படத்திற்கு பணியாற்றியுள்ளார்.

  ராதிகா பெரம்பூரை மிரட்டும் டானாக நடிக்கிறார், இதில் இவர் தனது அப்பா எம்.ஆர். ராதாவை போன்று வசனங்கள் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்படத்தில் ராதிகாவின் மகனான ஆரவ் ரயில்வே கான்ட்ராக்டராகவும், அம்மாவை தொடர்ந்து ரௌடிசம் செய்பவராகவும் நடிப்பார் என தெரியவந்துள்ளது.

  மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தின் கதை

  மார்க்கெட் ராஜா திரைப்படத்தில் ஒரு குறிப்பிடப்படும் இடத்திற்கு ராதிகா கட்டப்பஞ்சாயத்து, அடிதடி என ரௌடிசம் செய்து வருகிறார். இவருக்கு பக்கபலமாக இவரது மகன் ஆரவ் ரௌடியாக மக்களை அசச்சுறுத்தி வருகிறார். இவரை கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறை உதவியோடு சில ரௌடிகள் இவரை என்கவுண்டர் என்ற பெயரில் கொள்ளை செய்ய திட்டமிடுகிறது.

  காவலர்களின் என்கவுண்டரில் சிக்குகிறார் ஆரவ். காவலர்களால் சுடப்பட்டு விழுகும் ஆரவ் தீடீரென உயிர் பிழைக்கிறார். அப்போதிலிருந்து அதிரடி படமாக இருக்கும் திரைக்கதை திகில் படமாக மாறுகிறது. ஆரவ் உடலிற்குள் ஒரு டாக்டர் படிக்கும் மாணவனின் உயிர் இறங்குகிறது.

  பின் அப்பாவி மாணவனாக இருந்து ரௌடிசத்தில் இவரது பகையினை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் நகைச்சுவை கலந்த திகில் மற்றும் அதிரடி திரைப்படம்.

  ரிலீஸ்

  மார்க்கெட் ராஜா திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் வெளியிடப்பட்ட தகவல்களை தொடர்ந்து, இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதல் சில காரணங்களால் வெளியிடப்படவில்லை.

  இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் 2019 செப்டம்பர் 24-ல் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது.
  **Note:Hey! Would you like to share the story of the movie மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).