மழை பிடிக்காத மனிதன் இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆன்டனி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கமல் போஹ்ரா தயாரிக்க, இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி மாற்றும் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இணைந்து இசையமைத்துள்ளனர்.
அதிரடி- திரில்லர் படமாக உருவாகியுள்ள 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக இப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரவீன் கே எல் எடிட்டிங் செய்துள்ளார்.
மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் விஜய் ஆன்டனி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இவருடன் இணைந்து சரத்குமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், முரளி சர்மா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
2024 ஆகஸ்ட் 2ல் உலகமெங்கும் திரையரங்கில் வெளியாகியுள்ள 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் கதை
விஜய் ஆன்டனி இந்தியாவில் ரகசிய உளவாளியாக பணியாற்றி வருகிறார். விஜய் ஆன்டனி தனது மேல் அதிகாரியான சரத் குமாரின் தங்கையை காதல் திருமணம் செய்து கொள்கிறார். விஜய் ஆன்டனியால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதி இவரை பழிவாங்க விஜய் ஆன்டனி, அவரது மனைவி மற்றும் நண்பர்கள் என அனைவரையும் கொலை செய்கிறார்.
அதிலிருந்து தப்பித்த விஜய் ஆன்டனியை ரகசியமாக சரத் குமார் அந்தமான் தீவிற்கு அழைத்து சென்று மறந்து வாழ ஏற்பாடுகள் செய்கிறார். அந்தமான் தீவில் சாதாரண மனிதராக வாழும் விஜய் ஆன்டனியை தேடி பிச்சனைகள் வர தொடங்குகிறது.
அந்தமான் தீவில் இவருடன் பழகும் மனிதர்களுக்கு வரும் பிரச்சனை, அதனை எதிர்க்கும் விஜய் ஆன்டனி பின் இந்தியாவில் இருந்து விஜய் ஆன்டனியை தேடி வரும் பிரச்சனை என அதிரடி - திரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் திரைப்படமாக இப்படத்தினை இயக்கியுள்ளார், விஜய் மில்டன். இனி என்ன நடக்க போகிறது என்பதே இப்படத்தின் கதைக்களம்.