மென் இன் பிளாக் : இன்டெர்னஷனல் ஹாலிவுட் இயக்குனரான எப். கேரி கேரி இயக்கத்தில் கிறிஸ் ஹெம்ஷஒர்த், டெஸ்ஸா தோம்ப்சன் நடிக்கும் நகைச்சுவையான அதிரடி திரைப்படம்.
படக்குழு
எப். கேரி கேரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் வால்டர் எப் பார்க்கேர்ஸ் தயாரித்துள்ளார். மேலும் ஒளிப்பதிவாளர் ஸ்டுவர்ட் ட்ரய்புரஃஹ் மற்றும் படத்தொகுப்பாளர் கிறிஸ்டைன் வாக்னர் பணியில், இசையமைப்பாளர் டேனி ஈழஃப்மான் மற்றும் இசையமைப்பாளர் கிறிஸ் பாகான் இணைந்து இசையமைத்துள்ளனர்.
இத்திரைப்படத்தினை தயாரிப்பு நிறுவனமான கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் டென்சென்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, சோனி பிக்சர்ஸ் ரிலீசிங் நிறுவனம் இப்படத்தினை விநியோகம் செய்துள்ளது.
மென் இன் பிளாக்
அமெரிக்காவில் லண்டனில் உள்ள இரகசிய முகவர்கள் கொண்டு இயங்கி வரும் குழு எம்.ஐ.பி (மென் இன் பிளாக்). இக்குழு பூமியில் வாழும் வேற்று கிரக வாசிகளை ரகசியமாக கண்காணித்து காட்டுபடுத்தி வரும் அமைப்பாகும்.
கதை
எம்.ஐ.பி-யில் சிறந்த இரகசிய துப்பறியும் முகவராக இருக்கும் கிறிஸ் ஹெம்ஷஒர்த்-க்கு உதவியாளராக டெஸ்ஸா தோம்ப்சன் இணைகிறார். பின்னர் இவ்விருவரும் சேர்ந்து நடத்தும் துப்பறியும் படலாமே இத்திரைப்படம். இக்கதையினை நகைச்சுவையோடு, தொழில்நுட்பத்துடன் அதிரடி த்ரில்லராக இயக்கியுள்ளார் இயக்குனர் கேரி கேரி.