மெர்ரி கிறிஸ்துமஸ் - இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா சரத்குமார் என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ரமேஷ் துராணி - ஜெய தௌராணி இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர்கள் டேனியல் பி. ஜார்ஜ் (பின்னணி இசை) & ப்ரீதம் (பாடல்கள்) என இருவர் இணைந்து இசையமைத்துள்ளனர்.
மெர்ரி கிறிஸ்துமஸ் கதை:
மும்பை என பெயர் மாறுவதற்கு முன்பாக பாம்பே என அழைக்கப்பட்ட வந்த மும்பை நகரில் கிறிஸ்துமஸ் தினத்துக்கு ஒரு நாள் முன்பு இரவு நடக்கும் கதை தான் இந்த படம். 7 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து பம்பாய்க்குத் திரும்பும் விஜய் சேதுபதி ஒரு ரெஸ்டரன்ட்டில் மகளுடன் இருக்கும் கத்ரீனா கைஃபை சந்திக்க இருவருக்கும் ஏற்படும் பழக்கம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்படும் பிரச்சனை கடைசியில் வரும் ட்விஸ்ட் தான் இந்த படத்தின் கதை.