மோகினி இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில், த்ரிஷா நடிக்கும் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தில், த்ரிஷாவுடன், ஜாங்கிரி மதுமிதா, சுவாமிநாதன், கணேஷ்கர் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை :
பல ஆண்டுகளாக பழிவாங்க துடித்துக்கொண்டிருக்கும் மோகினி, திரிஷாவின் உடலில் புகுந்து தனது லட்சியத்தை நிறைவேற்றும் பழைய பேய் கதை தான் இந்த மோகினி. 'ஷ்ஷப்பா... திரும்பவுமா' எனச் சொல்ல வைக்கும் வகையில் தமிழ் சினிமாவில் மீண்டும் அதே பழி வாங்கும் மற்றொரு பேய்க்கதையாக 'மோகினி'. பயத்தில் உறைய வைக்கும் என எதிர்பார்த்து தியேட்டருக்குப் போனால், இது தானே அடுத்து நடக்கப் போகிறது என கிச்சுகிச்சு மூட்டி கோபம் வரும்படி காமெடி செய்கிறது.
சென்னையில் பிரபல கேக் நிபுணராக இருக்கும் திரிஷா, தோழியின் காதலுக்காக லண்டனுக்கு பறக்கிறார். அங்கு அவருக்கு காதலோடு, ஒரு பேயின் சகவாசமும் கிடைக்கிறது. திரிஷா மூலம் தன்னைக் கொன்றவர்களை பழி வாங்கத் துடிக்கிறது அந்த பேய். திரிஷா பேய் நினைத்ததை செய்து முடித்தாரா, அப்பேயின் பிளாஷ் பேக் என்ன என்பது தான் மோகினியின் கதைக்களம்.